“ஜெயலலிதா பல்கலைக்கழகம் தேவையற்ற ஒன்று”: அமைச்சர் பொன்முடி திட்டவட்டம்!

“ஜெயலலிதா பல்கலைக்கழகம் தேவையற்ற ஒன்று”: அமைச்சர் பொன்முடி திட்டவட்டம்!

ஜெயலலிதா பல்கலைக்கழகம் தேவையற்ற ஒன்று என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

“ஜெயலலிதா பல்கலைக்கழகம் தேவையற்ற ஒன்று”: அமைச்சர் பொன்முடி திட்டவட்டம்!

விழுப்புரத்தில் செய்தியாளர்களை சந்தித்த உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, “விழுப்புரத்தில் அமைக்கப்பட்டுள்ள ஜெயலலிதா பல்கலைக்கழகம் என்பது தேவையற்ற ஒன்று. ஏற்கனவே நாகப்பட்டினத்தில் ஜெயலலிதா பல்கலைக்கழகம் என்ற பெயரில் மீன்வள பல்கலைக்கழகம் உள்ளது. விழுப்புரத்தில் அமைக்கப்பட்ட ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைக்கும் விவகாரம் ஜெயலலிதாவின் பெயரை இருட்டடிப்பு செய்யும் செயலாக கருத முடியாது. ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைப்பது என்பது கல்வி வளர்ச்சிக்காக எடுத்த முடிவு. பேருக்காக மட்டுமே ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை அதிமுகவினர் ஆரம்பித்து வைத்துள்ளனர்” என்றார்.

“ஜெயலலிதா பல்கலைக்கழகம் தேவையற்ற ஒன்று”: அமைச்சர் பொன்முடி திட்டவட்டம்!

கடந்த அதிமுக ஆட்சியில் ஜெயலலிதா பல்கலைக்கழகம் திறக்கப்பட்டது. ஆனால் ஜெயலலிதா பல்கலைக்கழகம் அண்ணாமலை பல்கலைக் கழகத்துடன் இணைக்கப்படும் திமுக அரசு தெரிவித்துள்ளது. ஆனால் இதை எதிர்த்துள்ள அதிமுக, உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி நிதி இல்லை என்று கூறுகிறார். மதுரையில் முன்னாள் முதலமைச்சர் மறைந்த கலைஞர் பெயரில் நூலகம் அமைக்கப்படும் அமைக்க 200 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இது திமுகவின் திட்டமிட்ட செயல் என்று சாட்டியுள்ளது.