விழுப்புரத்தில் ஜெயலலிதா பல்கலைக்கழகம் : சட்ட மசோதா தாக்கல்!

 

விழுப்புரத்தில் ஜெயலலிதா பல்கலைக்கழகம் : சட்ட மசோதா தாக்கல்!

தமிழக சட்டப்பேரவையில் ஜெயலலிதா பல்கலைக் கழகம் திறப்பதற்கான சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டது.

சென்னை கலைவாணர் அரங்கில் தமிழக சட்டப்பேரவையின் 4ம் நாள் கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. ஆளுநர் உரையுடன் தொடங்கிய கூட்டத்தொடரில் மறைந்த எம்.எல்.ஏக்கள், அமைச்சர் துரைக்கண்ணு, எஸ்.பி.பி உள்ளிட்டோருக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பின்னர், நேற்று ஆளுநர் உரையின் மீதான விவாதம் நடைபெற்றது. அதே போல, உள்ளாட்சி அமைப்புகளில் தனி அலுவலர்களின் பதவிக்காலத்தை நீடிக்கும் மசோதாவும் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதித்த மசோதாவும் தாக்கலானது.

விழுப்புரத்தில் ஜெயலலிதா பல்கலைக்கழகம் : சட்ட மசோதா தாக்கல்!

இந்த நிலையில், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பெயரில் விழுப்புரத்தில் பல்கலைக் கழகம் அமைக்கும் சட்ட மசோதா இன்று தாக்கல் செய்யப்பட்டது. வேலூர், திருவள்ளூர் பல்கலைக்கழகத்தை பிரித்து, ஜெயலலிதா பல்கலைக் கழகம் உருவாக்கப்படுவதாகவும் கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருக்கும் கல்லூரிகள் ஜெயலலிதா பல்கலைக் கழகத்தின் கீழ் செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அண்ணாமலை பல்கலைக் கழக திருத்த சட்ட முன்வடிவும் சட்டப்பேரவையில் தாக்கலானது.