ஜெ.போயஸ் கார்டன் இல்லம் அரசுடைமை – சட்ட மசோதா இன்று தாக்கல்!

ஜெ.போயஸ் கார்டன் இல்லம்  அரசுடைமை – சட்ட மசோதா இன்று தாக்கல்!

ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தை அரசுடைமையாக்கியதற்கான சட்ட மசோதா இன்று தாக்கல் செய்யப்படுகிறது.

ஜெ.போயஸ் கார்டன் இல்லம்  அரசுடைமை – சட்ட மசோதா இன்று தாக்கல்!

ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தை விலைக்கு வாங்க சென்னை சிவில் நீதிமன்றத்தில் 68 கோடியை தமிழக அரசு டெபாசிட் செய்தது . இதில் வருமான வரித்துறைக்கு ஜெயலலிதா செலுத்த வேண்டிய 36 கோடி , வாரிசுகளான தீபக் மற்றும் தீபாவிற்கு நிவாரணமாக 32 கோடி ரூபாய் என 68 கோடி ரூபாயை அரசு செலுத்தியது. இதையடுத்து மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வசித்த வேதா இல்லம் அரசுடமையானது என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கான அவசர சட்டமும் கொண்டுவரப்பட்டது.

ஜெ.போயஸ் கார்டன் இல்லம்  அரசுடைமை – சட்ட மசோதா இன்று தாக்கல்!

இந்நிலையில் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தை அரசுடைமையாக்கியதற்கான சட்ட மசோதா இன்று தாக்கலாகிறது.ஏற்கனவே அவசர சட்டம் மூலம் அரசுடைமையாக்கப்பட்ட நிலையில், சட்டப்பேரவையில் இன்று மசோதா தாக்கல் செய்யப்படுகிறது.