“கூட்டணியில் இருந்து விலகியது பாமகவுக்கு தான் இழப்பு” – ஜெயக்குமார் அதிரடி பேச்சு!

 

“கூட்டணியில் இருந்து விலகியது பாமகவுக்கு தான் இழப்பு” – ஜெயக்குமார் அதிரடி பேச்சு!

உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிடுவோம் என பாமக அறிவித்ததால் அவர்களுக்கு தான் இழப்பு என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களில் வரும் அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட உள்ளது. அதிமுகவுடன் கூட்டணியில் இருக்கும் பாமக உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்துள்ளது. கட்சியின் வளர்ச்சிக்காக தொண்டர்கள் கருத்துக்களின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் விருப்ப மனுக்கள் அளிப்பவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என்றும் பாமக தலைவர் ராமதாஸ் அறிவித்தார்.

“கூட்டணியில் இருந்து விலகியது பாமகவுக்கு தான் இழப்பு” – ஜெயக்குமார் அதிரடி பேச்சு!

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொண்ட பாமக 5 இடங்களில் வெற்றிக் கண்டது. தற்போது கூட்டணியில் இருந்து விலகி தனித்து போட்டியிடுவதாக அறிவித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது. இந்த நிலையில், பாமக கூட்டணியில் இருந்து விலகியது குறித்து முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது பேசிய அவர், பாமக தனித்துப் போட்டி என்பது அவர்கள் கட்சி எடுத்த முடிவு. அதிமுகவை ராமதாஸ் விமர்சிப்பதை ஏற்க முடியாது. அதிமுக உட்கட்சி விவகாரம் குறித்து பேச யாருக்கும் தகுதி கிடையாது. யாருடைய அறிவுறுத்தலின் பேரில் தனித்துப் போட்டி என முடிவெடுத்தார்கள் என்பது தெரியவில்லை. தனித்துப் போட்டியிடுவதால் பாமகவுக்கு தான் இழப்பு. அதிமுகவுக்கு எந்த பாதிப்பும் இல்லை. திமுக கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. உள்ளாட்சித் தேர்தலில் அது எதிரொலிக்கும். அதிமுக ஆட்சியில் செய்த திட்டங்களை மக்களிடம் எடுத்துச் செல்வோம் என்று தெரிவித்தார்.