ஈபிஎஸ் – ஓபிஎஸ் சந்தித்துக் கொண்டது ஏன்? அமைச்சர் ஜெயக்குமார்

 

ஈபிஎஸ் – ஓபிஎஸ் சந்தித்துக் கொண்டது ஏன்? அமைச்சர் ஜெயக்குமார்

சென்னையில் காய்தே மில்லத் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், நட்சத்திர விடுதியில் இ.பி.எஸ். – ஓ.பி.எஸ். சந்தித்துக் கொண்டது இயல்பானது என்றார்.

ஈபிஎஸ் – ஓபிஎஸ் சந்தித்துக் கொண்டது ஏன்? அமைச்சர் ஜெயக்குமார்

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “இஸ்லாமிய மக்கள் பயன்பெற உயர் கல்வி நிறுவனங்கள் கொண்டுவந்து கல்வி புரட்சி ஏற்படுத்தியவர் காய்தே மில்லத், அவருடைய நூற்றாண்டு விழா அம்மா அரசு கொண்டாடியாது.. நேற்றே எடப்பாடி பழனிசாமி தெளிவு படுத்தி இருக்கிறார். ஈபிஎஸ் – ஒபிஎஸ் இடையே எந்த கருத்து வேறுபாடும் இல்லை

ஒரு கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் சந்தித்து பேசுவது இயல்பானது. இன்றைய ஆட்சி அதிகாரிகளை நம்பி உள்ளது. திமுக போன்று 10 பேருக்கு நிவாரணம் அளித்து விட்டு விளம்பரங்கள் தேடும் கட்சி நாங்கள் அல்ல. முதல்வரின் குரலை மக்களும் கேட்பதில்லை, அதிகாரிகளும் கேட்பதில்லை, முன்னர் போடப்பட்ட ஊரடங்கு ஊரடங்கு போலவா இருந்தது? “என கேள்வி எழுப்பினார்.