அமமுகவினர் என்ன எங்களுக்கு தம்பியா?- அமைச்சர் ஜெயக்குமார்

 

அமமுகவினர் என்ன எங்களுக்கு தம்பியா?- அமைச்சர் ஜெயக்குமார்

சென்னை ராயபுரத்தில் உள்ள மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமாரின் சட்டமன்ற அலுவலகத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில் அமைச்சர் ஜெயக்குமார் கலந்து கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், “அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள். பொங்கல் ஜாதி, மதம் இனம் இன்றி அனைவரும் கொண்டாடுகின்ற ஒரே பண்டிகை. மருத்துவ குழுவின் அறிவுரையை பெற்று அவ்வப்போது மக்களின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் நடவடிக்கை எடுத்து இருக்கிறோம். கோகுல இந்திரா தெரிவித்த கருத்து, சசிகலாவின் அரசியல் வருகை தொடர்பானது அல்ல. சசிகலா வருகை அரசியலில் எந்த தாக்கத்தையும் எற்படுத்தாது. கட்சியில் இருந்து கொண்டு சசிகலாவுக்கு ஆதரவாக பேச கூடாது, கட்சிக்கு விசுவாசமாக இருக்க வேண்டும். ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு கால் இருந்தால் அதனை ஏற்று கொள்ள முடியாது.

அமமுகவினர் என்ன எங்களுக்கு தம்பியா?- அமைச்சர் ஜெயக்குமார்

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசுவதை எல்லாம் கட்சி பார்த்துக் கொண்டுதான் இருக்கிறது. இரட்டை இலை சின்னத்தை எதிர்த்து நின்ற அமமுகவினர் நமக்கு தம்பியா? அதிமுகவில் இருந்துகொண்டு சசிகலாவுக்கு ஜால்ரா அடிப்பதை யாராலும் ஏற்றுக் கொள்ள முடியாது. அதிமுக அமமுக தொடர்பாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கருத்து ஏற்றுக்கொள்ள முடியாது. ராஜேந்திர பாலாஜி தெளிவு இல்லாமல் இருக்கிறார். அவர்கள் தம்பியும் கிடையாது எந்த உறவும் கிடையாது. எங்களை பொருந்த வரையில் தேர்தல் பணி முழுமையாக முடிந்தது. கூட்டணி இறுதி செய்யப்பட்டவுடன் குழு ஆராய்ந்து அறிக்கை கொடுத்தவுடன் முதல்வர் துணை முதல்வர் அறிவிப்பார்கள். திமுக கூட்டணியில் இருந்து பலர் அதிமுக கூட்டணிக்கு வருவார்கள்” என தெரிவித்தார்.