திமுகவினர் உப்பு போட்டுதான் சாப்புடுகின்றனரா என்பது சந்தேகமாக உள்ளது- அமைச்சர் ஜெயக்குமார்

 

திமுகவினர் உப்பு போட்டுதான் சாப்புடுகின்றனரா என்பது சந்தேகமாக உள்ளது- அமைச்சர் ஜெயக்குமார்

தென்னிந்திய பத்திரிக்கையாளர் யூனியன் தரப்பில் சமத்துவ பொங்கல் நிகழ்ச்சி அடையார் எம்.ஜி.ஆர்.ஜானகி மகளிர் கல்லூரியில் நடைபெற்றது. இதனை உயர் கல்வி துறை செயலாளர் அபூர்வா, சுகாதார துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், சென்னை காவல்துறை ஆணையர் மகேஷ் குமார் ஆகியோர் தொடங்கி வைத்தனர். தென்னிந்தய பத்திரிக்ககையாளர் யூனியனில் இருக்கும் 51 நிர்வாகிகள் சமத்துவ பொங்கல் கொண்டாடினர்.

நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், “பொங்கல் பரிசு வழங்குவது அனைவருக்கும் மகிழ்ச்சி அளிக்கிறது, அனைவரும் வரவேற்று உள்ளனர். திமுகவினர் உப்பு போட்டு சாப்புடுகின்றனரா என்பது சந்தேகமாக உள்ளது. பெண் இனத்தை கேவலபடுத்துவது, தனிமனதர்களை தாக்குவது அரசியலில் கூடாது. பெண்மணியை கொச்சை படுத்தி பேசுவது பெண் இனத்தையே கொச்சைபடுத்தி பேசுவது போன்றது.

திமுகவினர் உப்பு போட்டுதான் சாப்புடுகின்றனரா என்பது சந்தேகமாக உள்ளது- அமைச்சர் ஜெயக்குமார்

உதயநிதி பேச்சுக்கு பொதுக்குழுவில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. பக்குவமில்லாதா, முதிர்ச்சியற்ற நபர் உதயநிதி. அரசியலில் கண்ணியம், நாகரீகம் காக்கப்பட வேண்டும். கொளத்தூரில் போட்டியிடாமல், ராயாபுரத்தில் மட்டும் போட்டியிட ஸ்டாலின் தயரா?” என கேள்வி எழுப்பினார்.

பொதுக்கூட்டங்களின் போது ஆளுங்கட்சியினரை உதயநிதி மிக கடுமையாக விமர்சிப்பதால், திமுக மூத்த தலைவர்களே அவர் மீது கடுப்பில் இருப்பதாக கூறப்படுகிறது. அவரது விமர்சனங்கள் அதிமுகவினர் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அண்மையில் நடந்த பரப்புரையின் போது உதயநிதி சசிகலாவை தரக்குறைவாக பேசினார்.