முதல்வர் வேட்பாளர் விவகாரத்தில் கூட்டணி கட்சியினருக்கு அதிருப்தியா?- அமைச்சர் ஜெயக்குமார்

 

முதல்வர் வேட்பாளர் விவகாரத்தில் கூட்டணி கட்சியினருக்கு அதிருப்தியா?- அமைச்சர் ஜெயக்குமார்

2021 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டுள்ளார். பல்வேறுகட்ட பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு இந்த அறிவிப்பு வெளியானது. இதனையடுத்து, அதிமுக கூட்டணி கட்சிகள் சார்பில் பல்வேறு தலைவர்கள் எடப்பாடி பழனிசாமிக்கு வாழ்த்து தெரிவித்துவருகின்றனர்

இந்நிலையில் சென்னை பட்டினப்பாக்கத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர், “தமிழகத்தின் கடன் தொகை 2006ல் திமுக ஆட்சி முடியும் போது 1 லட்சம் கோடியாக இருந்தது. நிதி பொறுப்புடைமை சட்டம்படி தான் நிதி மேலாண்மையை தமிழக அரசு கையாண்டு வருகிறது. திமுக செய்த ஊதாரித்தனமான செலவினால் தான் கடன் அதிகரித்துள்ளது. அதற்கு வட்டி சேர்ந்து தான் தற்போது இந்த நிலை உருவாகியுள்ளது. 2021 ஆம் ஆண்டை நோக்கி செல்வதே அதிமுகவின் இலக்கு. உழைப்பவர்களுக்கு ஏற்ற அங்கீகாரத்தை நிச்சயம் அதிமுக அளிக்கும். தேர்தலை நோக்கி இன்னும் குழுக்கள் அமைக்கப்பட இருக்கிறது. அதிமுக தேர்தல் நேரத்தில் அறிவிக்கப்படும் குழுக்களில் முஸ்லிம்கள், பெண்கள் உள்ளிட்ட அனைவருக்கும் பிரதிநிதித்துவம் வழங்கப்படும்.

முதல்வர் வேட்பாளர் விவகாரத்தில் கூட்டணி கட்சியினருக்கு அதிருப்தியா?- அமைச்சர் ஜெயக்குமார்

வரும் திங்கள் கிழமை நடைப்பெறக்கூடிய ஜி.எஸ்.டி ஆலோசனை கூட்டத்தில் நமக்கு அளிக்க வேண்டிய தொகை தொடர்பாக தெரிவிக்கப்படும். முதல்வர் வேட்பாளர் விவகாரத்தில் கூட்டணி கட்சியினருக்கு அதிருப்தி எதுவும் இல்லை. சிறுபான்மை மக்களுக்கு எப்போதும் அங்கீகாரம் அளிப்பது அதிமுக மட்டுமே.” எனக் கூறினார்.