“200க்கும் மேற்பட்ட இடங்களில் திமுக கூட்டணி வெற்றி பெறும்”

 

“200க்கும் மேற்பட்ட இடங்களில் திமுக கூட்டணி வெற்றி பெறும்”

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ள நிலையில், திமுக சார்பில் போட்டியிடுவதற்கான வேட்பு மனு தாக்கல் இன்றுடன் நிறைவு பெற்றது. தேர்தல் அறிவிப்புக்கு முன்னரே விருப்ப மனு விநியோகத்தை தொடங்கிய அரசியல் கட்சிகள், தொகுதிகளை இறுதி செய்வது மற்றும் வேட்பாளர் நேர்காணல் ஆகிய பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. அதிமுக தனது கூட்டணி கட்சிகள் இடையேயான தொகுதி பங்கீட்டை இறுதி செய்துள்ளது. சட்டமன்றத் தேர்தலுக்கான தொகுதி பங்கீட்டை முடிவு செய்ய திமுகவுடன் விசிக மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட கட்சிகள் நாளை பேச்சுவார்த்தை நடத்தவுள்ளன.

“200க்கும் மேற்பட்ட இடங்களில் திமுக கூட்டணி வெற்றி பெறும்”

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, “திமுகவுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற்றுவருகிறது. 200க்கும் மேற்பட்ட இடங்களில் திமுக கூட்டணி வெற்றி பெறும். பெரும்பான்மையுடன் திமுக ஆட்சி அமைக்கும். நாளை தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்படும். நாளை திமுக தலைவர் ஸ்டாலினை சந்திகக் உள்ளோம்” என்று கூறினார்.

இதேபோல் இ.யூ.மு.லீக் கட்சியின் தேசிய தலைவர் காதர் மொய்தீன் செய்தியாளர்களிடம் பேசுகையில், “ திமுகவுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர். கடந்த தேர்தலில் எங்களுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. தொகுதிகளின் எண்ணிக்கை பற்றி மட்டுமே இன்று பேசினோம்.நாளை மாலை மீண்டும் சந்தித்து தொகுதி பங்கீடு குறித்து முடிவை அறிவிப்போம்” எனக் கூறினார்.