ஐசிசி டெஸ்ட் தரவரிசை- சாதனை படைத்த பும்ரா

 

ஐசிசி டெஸ்ட் தரவரிசை- சாதனை படைத்த பும்ரா

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இன்று வெளியிட்ட டெஸ்ட் தரவரிசைப் பட்டியலின் பந்துவீச்சாளர்கள் பட்டியலில் இந்திய பந்துவீச்சாளர் பும்ரா ஒன்பதாவது இடத்துக்கு முன்னேறி சாதனை படைத்துள்ளார்.

ஐசிசி டெஸ்ட் தரவரிசை- சாதனை படைத்த பும்ரா

இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் போட்டியில், இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. ஓவல் மைதானத்தில் இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா, முக்கியமான 2 இங்கிலாந்து வீரர்களான ஒல்லி போப் மற்றும் ஜானி பேர்ஸ்டோவை வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற உதவினர். அதேபோல் ஷர்துல் தாக்கூர் இரு இன்னிங்ஸிலும் அடித்த அரைசதங்கள் இந்திய அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக இருந்தது.

இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இன்று வெளியிட்ட டெஸ்ட் தரவரிசைப் பட்டியலின் பந்துவீச்சாளர்கள் பட்டியலில் 10ஆவது இடத்தில் இருந்த பும்ரா 9 வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். ஷர்துல் தாக்கூர், பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் 59 இடங்கள் நகர்ந்து 79-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். பந்துவீச்சாளர் வரிசையிலும் தாக்கூர் 7 இடங்கள் நகர்ந்து, 49-வது இடத்தைப் பிடித்துள்ளார். இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் கிறிஸ் வோக்ஸ் 7 இடங்கள் முன்னேறி 87-வது இடத்துக்கு நகர்ந்துள்ளார். ராபின்ஸன் 3 இடம் நகர்ந்து 33-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

இங்கிலாந்திற்கு எதிரான நான்கு டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்காத போதிலும் இந்தியாவின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் ஆர் அஷ்வின் இரண்டாவது இடத்தில் இருக்கிறார். இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் முன்னிலை வகிக்கும் முதல் 10 பேட்ஸ்மேன்களில் எந்த மாற்றமும் இல்லை. ரோஹித் சர்மா மற்றும் விராட் கோஹ்லி தரவரிசையில் ஐந்தாவது மற்றும் ஆறாவது இடத்தில் உள்ளனர்.