• February
    24
    Monday

Main Area

Main



குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராடிய மோடியின் மனைவி?

Jashodaben
Jashodaben

குடியுரிமை திருத்த திட்டத்திற்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடியின் மனைவி ஜசோதாபென் போராட்டத்தில் ஈடுபடுவது போன்ற புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகிவருகிறது. 

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் வங்க தேசம் ஆகிய நாடுகளிலிருந்து மத துன்புறுத்தல் காரணமாக இந்தியாவுக்கு அகதிகளாக வந்த முஸ்லிம் அல்லாதவர்களுக்கு குடியுரிமை வழங்கும் வகையில் குடியுரிமை திருத்த சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. ஆனால் இதற்கு பொது மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. மேலும் இந்த சட்டத்தை மத்திய அரசு திரும்ப பெற உத்தரவிடக் கோரியும், குடியுரிமை திருத்த சட்டத்தின் அரசியலமைப்பு செல்லுபடியை எதிர்த்தும் பல்வேறு கட்சிகள் மற்றும் தனிநபர்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளனர். 

Jashodaben

இந்நிலையில் கடந்த மாதம் 15 ஆம் தேதி குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக இஸ்லாமிய பெண்கள் கலந்து கொண்ட போராட்டங்கள் நடைபெற்றன. இதுபோன்ற போராட்டங்களில் நரேந்திர மோடியின் மனைவி ஜசோதாபென்னும் கலந்து கொண்டதாகவும் அதுதொடர்பான புகைப்படங்கள் கசிந்ததாகவும் செய்திகள் வெளியாகின. ஆனால் உண்மையில் அந்த புகைப்படம் பிப்ரவரி 13, 2016-ம் ஆண்டு எடுக்கப்பட்டது என தெரியவந்துள்ளது. அன்றைய தினம் ஆதரவற்றோருக்காக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டாரம் மோடியின் மனைவி ஜசோதாபென். 


 

2018 TopTamilNews. All rights reserved.