• April
    05
    Sunday

Main Area

Main



இந்த ஜப்பான் ஸ்மார்ட்போன் மூலம் நிர்வாண புகைப்படம் எடுக்க முடியாது

japan smartphone
japan smartphone

டோக்கியோ: டோன் இ20 என்ற ஸ்மார்ட்போனில் நிர்வாணமாக புகைப்படம் எடுக்க முடியாதபடி பாதுகாப்பு அம்சம் வழங்கப்பட்டுள்ளது.

ஜப்பானை சேர்ந்த டோன் இ20 என்ற ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்களை கவனித்தால் பெரிதாக ஈர்க்காது. அதுமட்டுமின்றி இது ஒரு பட்ஜெட் ரக ஸ்மார்ட்போன் ஆகும். இதில் 6.2 இன்ச் ஹெச்.டி ஐ.பி.எஸ் எல்.சி.டி டிஸ்பிளே, 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி மெமரி, மூன்று ரியர் கேமராக்கள், 8 எம்.பி செல்பி கேமரா ஆகிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. இப்போது இந்த மாடல் ஜப்பானில் மட்டுமே கிடைக்கிறது.

ஆனால் இந்த ஸ்மார்ட்போனின் முக்கிய சிறப்பம்சமாக ஒரு வசதி இடம்பெற்றுள்ளது. அதாவது இந்த ஸ்மார்ட்போனை பயன்படுத்தி நிர்வாணமாக புகைப்படம் அல்லது வீடியோ எடுக்க முடியாது. அதற்கான தடுப்பு பாதுகாப்பு அம்சம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனை வேறு ஒரு ஸ்மார்ட்போனுடன் கனெக்ட் செய்து விட்டால், தவறான புகைப்படங்கள் எடுக்கப்படும்போது அந்த ஸ்மார்ட்போனுக்கு நோட்டிபிகேஷன் அனுப்பும். ஆனால் நிர்வாண புகைப்படங்களை டவுன்லோடு செய்வதை இந்த ஸ்மார்ட்போன் தடுக்காது என்பது குறிப்பிடத்தக்கது.

2018 TopTamilNews. All rights reserved.