• April
    04
    Saturday

Main Area

Main



முகபாவனைகளை வெளிப்படுத்தும் சிறுவன் போன்ற ரோபோ - ஜப்பான் விஞ்ஞானிகள் அசத்தல்!

robot
robot

டோக்கியோ: சிறுவன் போன்ற தலை கொண்ட, முகபாவனைகளை வெளிப்படுத்தும் ரோபோவை ஜப்பான் விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.

இன்றைய நவீன காலகட்டம் செயற்கை நுண்ணறிவு உதவியுடன் புதுப்புது கண்டுபிடிப்புகளை நாள்தோறும் அறிமுகம் செய்து கொண்டே இருக்கிறது. கடந்த 20 ஆண்டுகளில் அடைந்த இணைய வளர்ச்சியும் அதற்கு முக்கிய காரணியாக பார்க்கப்படுகிறது. அதேபோல பல துறைகளில் ரோபோக்கள் பயன்பாடு அதிகரித்து வருகிறது. இதனால் மனித உழைப்பு கோரப்படும் வேலைகள் குறைந்து கொண்டே வருகின்றன. இது மனித இனத்துக்கு நல்லதா, கெட்டதா என ஒருபுறம் ஆராய்ச்சிகள் போய்க் கொண்டிருக்கிறது.

இந்நிலையில், ஜப்பானில் உள்ள ஒசாகா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் குழு ஒரு பிளேட் ரன்னர்-எஸ்க்யூ ரோபோவை உருவாக்கியுள்ளனர். அதாவது சிறுவன் போன்ற தலை கொண்ட, முகபாவனைகளை வெளிப்படுத்தும் ரோபோவை ஜப்பான் விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். இந்த ரோபோ வலியை உணரக் கூடியது. அதனால் அதற்கேற்ற முகபாவனையை ரோபோ தத்ரூபமாக வெளிப்படுத்துகிறது. இந்த ரோபோவுக்கு அஃபெட்டோ என்று விஞ்ஞானிகள் பெயர் சூட்டியுள்ளனர்.

2018 TopTamilNews. All rights reserved.