ஜப்பான்: கொரோனா தொற்றுநோய் காரணமாக விதிக்கப்பட்ட உள்நாட்டு பயணக் கட்டுப்பாடுகள் தளர்வு

 

ஜப்பான்: கொரோனா தொற்றுநோய் காரணமாக விதிக்கப்பட்ட உள்நாட்டு பயணக் கட்டுப்பாடுகள் தளர்வு

டோக்கியோ: கொரோனா தொற்றுநோய் காரணமாக விதிக்கப்பட்ட உள்நாட்டு பயணக் கட்டுப்பாடுகளை ஜப்பான் அரசு தளர்த்தியுள்ளது.

கொரோனா வைரஸ் பரவல் நெருக்கடி காரணமாக ஜப்பான் நாட்டு சுற்றுலாத் துறை கடுமையாக பாதிக்கப்பட்டது. அதனால் சுற்றுலாத் துறையை மீண்டும் செயல்படுத்துவதற்காக ஜப்பான் அரசு உள்நாட்டு பயணக் கட்டுப்பாடுகளை முழுமையாக நீக்கியதுடன் அதன் எல்லைகளைத் திறக்கும் திட்டங்களை வகுத்து வருகிறது.

கொரோனா பரவுவதை தடுக்க அந்நாட்டில் விதிக்கப்பட்ட அவசரநிலை பிரகடனம் மே 25 அன்று நீக்கப்பட்டது. ஆனால் டோக்கியோவிலிருந்து பக்கத்து நாடுகளான சிபா, கனகாவா மற்றும் சைட்டம், ஹொக்கைடோ ஆகியவற்றுக்கு அத்தியாவசியமற்ற பயணங்கள் மேற்கொள்வதற்கான கட்டுப்பாடுகள் தொடர்கின்றன.

ஜப்பான்: கொரோனா தொற்றுநோய் காரணமாக விதிக்கப்பட்ட உள்நாட்டு பயணக் கட்டுப்பாடுகள் தளர்வு

ஆனால் தற்போது உள்நாட்டு பயணக் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளதால் இது அந்நாட்டு சுற்றுலா துறையை மீட்டெடுப்பதற்கு வழிவகுத்துள்ளது.  கூடிய விரைவில் வெளிநாட்டு பயணக் கட்டுப்பாடுகளும் நீக்கப்பட உள்ளதாக ஜப்பான் அரசாங்கம் கூறியுள்ளது.

கொரோனா பரவலுக்கு பின்பு வெளிநாட்டினருக்கான நுழைவுத் தடையை நீக்கிய முதன்மையான நாடுகளாக வியட்நாம், தாய்லாந்து, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகியவை தற்போது உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.