மத்திய பிரதேசத்தை தொடர்ந்து பீகாரையும் அழிக்க நினைக்கிறார்… திக்விஜய சிங்கை தாக்கிய ஐக்கிய ஜனதா தளம்

மத்திய பிரதேசத்தை தொடர்ந்து பீகாரையும் அழிக்க நினைக்கிறார்… திக்விஜய சிங்கை தாக்கிய ஐக்கிய ஜனதா தளம்

மத்திய பிரதேசத்தை தொடர்ந்து பீகாரையும் திக்விஜய சிங் அழிக்க நினைக்கிறார் என்று ஐக்கிய ஜனதா தளத்தின் மூத்த தலைவர் ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார்.

மத்திய பிரதேசத்தின் முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான திக்விஜய் சிங், நிதிஷ் ஜி, பீகார் உங்களுக்கு சிறியதாகி விட்டது. நீங்கள் தேசிய அரசியலில் சேர வேண்டும். மத்திய அரசின் பிரித்தல் மற்றும் ஆட்சி கொள்கையை கைவிட வேண்டாம். அனைத்து சமதர்மவாதிகளும் மதச்சார்ப்பற்ற சித்தாந்தத்தை நம்ப உதவுங்கள். பரிசீலனை செய்யுங்கள் என்று தெரிவித்து இருந்தார்.

மத்திய பிரதேசத்தை தொடர்ந்து பீகாரையும் அழிக்க நினைக்கிறார்… திக்விஜய சிங்கை தாக்கிய ஐக்கிய ஜனதா தளம்
சஞ்சய் சிங்

திக்விஜய சிங்கின் இந்த கருத்துக்கு ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் சிங் பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது: அவர் (திக்விஜய சிங்) ஏற்கனவே மத்திய பிரதேசத்தை அழித்து விட்டார். தற்போது அதேபோல் பீகாரையும் அழிக்க விரும்புகிறார். அந்த ஆலோசனை அவர் தனக்கும், காங்கிரசுக்கும் வைத்திருந்தால் நன்றாக இருக்கும்.

மத்திய பிரதேசத்தை தொடர்ந்து பீகாரையும் அழிக்க நினைக்கிறார்… திக்விஜய சிங்கை தாக்கிய ஐக்கிய ஜனதா தளம்
நிதிஷ் குமார்

அது எங்களுக்கு தேவையில்லை. காங்கிரஸ் ஏற்கனவே மூழ்கி கொண்டு இருக்கிறது. அதில் ஏறியவர்களும் அதோடு மூழ்குவார்கள். ஒரு ஜனநாயகத்தில் பொதுமக்கள் அதிகாரத்தை வைத்திருக்கிறார்கள். மக்கள் தங்கள் ஆணையை நிதிஷ்குமாரிடம் கொடுத்தார்கள். பிறகு ஏன் அந்த ஆணை தாக்கப்படுகிறது? அவர்கள் தோல்வியை ஏற்றுக்கொள்ள வேண்டும். இந்த விஷயத்துக்காக அவர்கள் இந்திய தேர்தல் ஆணையத்தையோ அல்லது இந்திய ஜனாதிபதியையோ அணுகினால் எப்படி முக்கியமாகும்?. இவ்வாறு அவர் தெரிவித்தார்.