• March
    31
    Tuesday

Main Area

Main



இன்று இரவு முதல் புதுச்சேரியில் ஊரடங்கு உத்தரவு : முதல்வர் நாராயணசாமி அறிவிப்பு!

முதல்வர் நாராயணசாமி
முதல்வர் நாராயணசாமி

கொரோனா குறித்து மக்கள் பீதியடைந்திருந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாட்களுக்கு முன்னர் மக்களிடம் உரையாடினார். அதில், கொரோனா இந்தியாவுக்கு வராது என்று நினைக்க வேண்டாம். மிகவும் மோசமான நிலையில் இருக்கிறோம். குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் வெளியே வர வேண்டாம். முடிந்தவரை 22 ஆம் தேதி வரை வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம். யாரும் மெத்தனமாக இருக்க வேண்டாம். கொரோனா இந்தியாவைப் பாதிக்காது என்று எண்ணினால் அது தவறு. வரும் சில வாரங்களுக்கு அரசுடன் ஒத்துழைப்பு கொடுங்கள் என்று தெரிவித்தார்.  

ttn

பிரதமரின் வேண்டுகோளுக்கு இணங்க நேற்று காலை 7 மணி முதல் நாடு முழுவதும் சுய ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. அதன் பிறகு பல மாநிலங்களில் சுய  ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. சென்னை உள்ளிட்ட சில பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதே போல புதுச்சேரியிலும் 144 தடை போடப்பட்டது. இருப்பினும்,மக்கள் நடமாட்டம் அதிகமாக இருப்பதால் இன்று இரவு முதல் வரும் 31 ஆம் தேதி வரை  ஊடரங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். 

2018 TopTamilNews. All rights reserved.