இந்தியக் குடும்பங்களின் எதிர்கால பாதுகாப்பை உறுதி செய்த ஜன்தன் யோஜனா! – பிரதமர் மோடி பெருமிதம்

இந்தியக் குடும்பங்களின் எதிர்கால பாதுகாப்பை உறுதி செய்த ஜன்தன் யோஜனா! – பிரதமர் மோடி பெருமிதம்

இந்தியாவின் ஏராளமான குடும்பங்களின் எதிர்கால பாதுகாப்பை ஜன்தன் யோஜனா உறுதி செய்துள்ளது என்று அதன் 6ம் ஆண்டு நிறைவையொட்டி பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

இந்தியக் குடும்பங்களின் எதிர்கால பாதுகாப்பை உறுதி செய்த ஜன்தன் யோஜனா! – பிரதமர் மோடி பெருமிதம்
Prime Minister Modi

வங்கிக் கணக்கு இல்லாதவர்களுக்கு வங்கிக் கணக்கு தொடங்கும் ஜன்தன் திட்டம் 2014ம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. இதன் மூலம் நாடு முழுவதும் உள்ள அனைவருக்கும் வங்கிக் கணக்கு திறக்கப்பட்டன. இந்த வங்கிக் கணக்கு மூலமாக அரசின் மானியங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. மினிமம் பேலன்ஸ் உள்ளிட்ட பிரச்னைகளும் இதில் உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த திட்டம் தொடங்கப்பட்டு ஆறு ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி பிரதமர் மோடி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தன் மகிழ்ச்சியை

வெளிப்படுத்தியுள்ளார். அந்த பதிவில், “ஆறு ஆண்டுகளுக்கு முன்பு இன்றுதான் வங்கிக் கணக்கு இல்லாதவர்களுக்கு கணக்கு தொடங்கும் பிரதம மந்திரி ஜன்தன் திட்டம் தொடங்கப்பட்டது. இந்த முயற்சியானது இந்த நாட்டின்

இந்தியக் குடும்பங்களின் எதிர்கால பாதுகாப்பை உறுதி செய்த ஜன்தன் யோஜனா! – பிரதமர் மோடி பெருமிதம்
Jan Than Yojana

வறுமையை ஒழிக்கும் முயற்சிக்கு, கோடிக்கணக்கான மக்களுக்கு நலன்களைக் கொண்டு சேர்க்கும் முயற்சிக்கு அடித்தளமாக அமைந்துள்ளது.
ஏராளமான குடும்பங்களின் எதிர்கால பாதுகாப்பை உறுதி செய்த பிரதமரின் ஜன் தன் திட்டத்துக்கு நன்றி. இதில் கிராமப்புற குறிப்பாக பெண்கள் அதிக விகிதத்தில் பயனடைந்துள்ளனர். பிரதமர் ஜன் தன் திட்டத்துக்காக ஓய்வின்றி உழைத்த அனைவருக்காகவும் நான் பாராட்டைத் தெரிவிக்கிறேன்” என்று கூறியுள்ளார்.