மணப்பாறை தீராம்பட்டியில் ஜல்லிக்கட்டு தொடக்கம்… 600 காளைகள், 300 காளையர்கள் பங்கேற்பு…

 

மணப்பாறை தீராம்பட்டியில் ஜல்லிக்கட்டு தொடக்கம்… 600 காளைகள், 300 காளையர்கள் பங்கேற்பு…

திருச்சி

மணப்பாறை அருகே தீராம்பட்டியில் அந்தோணியார் ஆலாய திருவிழாவையொட்டி ஜல்லிக்கட்டு போட்டி உற்சாகமாக தொடங்கி நடைபெற்று வருகிறது.

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த தீராம்பட்டியில் உள்ள புனித வனத்து அந்தோணியார் தேவாலய பொங்கல் விழாவை ஒட்டி, இன்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இதில் திருச்சி, மதுரை, புதுக்கோட்டை, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த 600-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றுள்ளன. அதேபோல், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களும் கலந்துகொண்டனர்.

மணப்பாறை தீராம்பட்டியில் ஜல்லிக்கட்டு தொடக்கம்… 600 காளைகள், 300 காளையர்கள் பங்கேற்பு…

ஜல்லிக்கட்டு போட்டியை மணப்பாறை வட்டாட்சியர் லஜபதிராஜ் மற்றும் டிஎஸ்பி பிருந்தா ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். முதல் காளையாக வாடிவாசலில் இருந்து கோயில் காளை திறந்து விடப்பட்டது. அதனை தொடர்ந்து, காளைகள் ஒவ்வொன்றாக திறக்கப்பட்டு வருகிறது.

வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்து செல்லும் காளைகளை, இளைஞர்கள் திமிலை பிடித்து அடக்கினர். மேலும், சில காளைகள் வீரர்களை அச்சுறுத்தியபடி பிடிபடாமல் சென்றன. போட்டியில் வென்ற இளைஞர்களுக்கும், பிடிபடாத காளைகளுக்கும் தங்ககாசு, டிவி, கட்டில், பாத்திரங்கள் பரிசாக வழங்கப்பட்டு வருகிறது. இந்த இந்த போட்டியை மணப்பாறை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கண்டுகளித்து வருகின்றனர்.