ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் தேதி அறிவிப்பு!

 

ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் தேதி அறிவிப்பு!

தைத்திருநாளான பொங்கல் பண்டிகையின் போது ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு நடத்தப்படுவது வழக்கம். அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் ஜல்லிக்காட்டும், பிற இடங்களில் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சிகளும் நடத்தப்படும். அந்த வகையில் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்காக மாடுகளை தயார் செய்யும் பணி தொடங்கிவிட்டது. ஆனால், கொரோனா வைரஸ் பாதிப்பால் இந்த முறை ஜல்லிக்கட்டு நடத்த அரசு அனுமதி வழங்குமா? என்ற கேள்வி வெகுவாக எழுந்தது. இந்த நிலையில், கட்டுப்பாடுகளுடன் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி அளிப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் தேதி அறிவிப்பு!

இந்நிலையில் ஜல்லிக்காட்டு போட்டிகள் நடைபெறும் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஜனவரி 14 ஆம் தேதி அவனியாபுரத்திலும், 15 ஆம் தேதி பாலமேட்டிலும், 16 ஆம் தேதி அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. போட்டியில் 300 வீரர்கள் பங்கேற்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டை காண 50% பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும், தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.