திருச்சி சூரியூரில் ஜல்லிக்கட்டு போட்டி தொடக்கம்… 500-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்பு…

 

திருச்சி சூரியூரில் ஜல்லிக்கட்டு போட்டி தொடக்கம்… 500-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்பு…

திருச்சி

திருச்சி மாவட்டம் சூரியூரில் பொங்கல் பண்டிகையை ஒட்டி, இன்று ஜல்லிக்கட்டு போட்டி உற்சாகமாக தொடங்கி நடைபெற்று வருகிறது.

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகேயுள்ள சூரியூரில் பொங்கல் பண்டிகையொட்டி, கடந்த 15ஆம் தேதி ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட இருந்தது. ஆனால் கனமழையின் காரணமாக போட்டி திடீரென ஒத்திவைக்கப்பட்ட நிலையில், இன்று ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டது. இதில், திருச்சி, திண்டுக்கல், மதுரை, புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 500-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றுள்ளன. போட்டியில் பங்கேற்க 300 மாடிபிடி வீரர்கள் பதிவு செய்திருந்தனர்.

திருச்சி சூரியூரில் ஜல்லிக்கட்டு போட்டி தொடக்கம்… 500-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்பு…

இதனை தொடர்ந்து, திருச்சி மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் விஸ்வநாதன் கொடியசைத்து வைத்து போட்டியை தொடங்கி வைத்தார். தொடர்ந்து, வாடிவாசலில் இருந்து முதலாவதாக கோயில் காளை அவிழ்த்துவிடப்பட்டது. அதனை தொடர்ந்து, வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்து சென்ற காளைகளை, மாடுபிடி வீரர்கள் அடக்க முயற்சி செய்தனர். ஜல்லிக்கட்டு போட்டியை காண ஆயிரக் கணக்கானோர் சூரியூரில் திரண்டிருந்தனர். இதனையொட்டி, அந்த பகுதியில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.