ஜல்லிக்கட்டு காளைகளுக்கான டோக்கன் வழங்கும் நிகழ்வில் தள்ளுமுள்ளு – போலீசார் தடியடி!

ஜல்லிக்கட்டு காளைகளுக்கான டோக்கன் வழங்கும் நிகழ்வில் தள்ளுமுள்ளு – போலீசார் தடியடி!

ஜல்லிக்கட்டு காளைகளுக்கான டோக்கன் வழங்கும் நிகழ்வில் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் போலீசார் தடியடி நடத்தினர்.

ஜல்லிக்கட்டு காளைகளுக்கான டோக்கன் வழங்கும் நிகழ்வில் தள்ளுமுள்ளு – போலீசார் தடியடி!

பொங்கல் பண்டிகையையொட்டி ஜல்லிக்கட்டு போட்டி அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் உள்ளிட்ட இடங்களில் நடைபெறவுள்ளது. இந்த முறை கொரோனா விதிமுறைகளை பின்பற்றி ஜல்லிக்கட்டு போட்டி நடத்த தமிழக அரசு அனுமதி அளித்த நிலையில் வருகின்ற 14ஆம் தேதி அவனியாபுரத்தில், 15ஆம் தேதி பாலமேட்டிலும், 16ஆம் தேதி அலங்காநல்லூரிலும் போட்டி நடைபெறவுள்ளது. 50 சதவீத பார்வையாளர்கள் மட்டுமே அனுமதி மற்றும் 300 வீரர்கள் போட்டியில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவர் போன்ற வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஜல்லிக்கட்டு காளைகளுக்கான டோக்கன் வழங்கும் நிகழ்வில் தள்ளுமுள்ளு – போலீசார் தடியடி!

இந்நிலையில் மதுரை அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகளுக்கு முன்பதிவு தொடங்கியுள்ளது. ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொள்ளும் காளைகளுக்கு முன்பதிவு டோக்கன் வழங்கும் முகாம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

ஜல்லிக்கட்டு காளைகளுக்கான டோக்கன் வழங்கும் நிகழ்வில் தள்ளுமுள்ளு – போலீசார் தடியடி!

கால்நடைத்துறை மூலம் பெறப்பட்ட காளைகளுக்கான உடல் தகுதி சான்றை கட்டாயம் கொண்டு கொண்டுவர அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த சூழலில் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டிக்கான காளை உரிமையாளர்களுக்கு டோக்கன் வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது. டோக்கன் வழங்கும் இடத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் போலீசார் தடியடி நடத்தினர். இதனால் தற்காலிகமாக டோக்கன் வழங்கும் நிகழ்ச்சியை நிறுத்தி வைக்க போலீசார் உத்தரவிட்டுள்ளனர்.