ஜல்லிக்கட்டு 2021 : மாடுபிடி வீரர்களுக்கான முன்பதிவு தொடங்கியது!

 

ஜல்லிக்கட்டு 2021 : மாடுபிடி வீரர்களுக்கான முன்பதிவு தொடங்கியது!

ஜல்லிக்கட்டு போட்டியில் மாடுபிடி வீரர்களுக்கான முன்பதிவு இன்று தொடங்கியது.

பொங்கல் பண்டிகையின்போது தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படும். ஜல்லிக்கட்டு போட்டியானது அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் உள்ளிட்ட இடங்களில் நடைபெறுவது வழக்கம். இந்த முறை கொரோனா விதிமுறைகளை பின்பற்றி ஜல்லிக்கட்டு போட்டி நடத்த தமிழக அரசு அனுமதி அளித்தது. வருகின்ற 14ஆம் தேதி அவனியாபுரத்தில், 15ஆம் தேதி பாலமேட்டிலும், 16ஆம் தேதி அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறவுள்ளது.

ஜல்லிக்கட்டு 2021 : மாடுபிடி வீரர்களுக்கான முன்பதிவு தொடங்கியது!

இந்நிலையில் மதுரை ஜல்லிக்கட்டு போட்டியில் மாடுபிடி வீரர்களுக்கான உடற்தகுதி தேர்வு, டோக்கன் முன்பதிவு தொடங்கியது. 14 மருத்துவர்களை உள்ளடக்கிய 50 பேர் கொண்ட குழு மாடுபிடி வீரர்களுக்கு பரிசோதனை செய்கிறது . அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் ஆகிய 3 இடங்களில் மாடுபிடி வீரர்களுக்கான முகாம் நடத்தப்பட்டுள்ளது. மாடுபிடி வீரர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட இடத்தில் முன்பதிவு செய்ய முடியாது; 50 சதவீத பார்வையாளர்கள் மட்டுமே அனுமதி; 300 வீரர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர் போன்ற வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஜல்லிக்கட்டு 2021 : மாடுபிடி வீரர்களுக்கான முன்பதிவு தொடங்கியது!

அலங்காநல்லூரில் ஜனவரி 16 ஆம் தேதி முதல்வர் , துணை முதல்வர் இருவரும் ஜல்லிக்கட்டு பொடியை தொடங்கி வைக்கவுள்ளது குறிபிடத்தக்கது.