Home இந்தியா "அம்பானி எங்க டார்கெட் இல்ல.. மோடி-அமித் ஷா தான் டார்கெட்" - பயங்கரவாத அமைப்பு பகீரங்க எச்சரிக்கை!

“அம்பானி எங்க டார்கெட் இல்ல.. மோடி-அமித் ஷா தான் டார்கெட்” – பயங்கரவாத அமைப்பு பகீரங்க எச்சரிக்கை!

பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் பங்களாவுக்கு அருகே வெடிகுண்டு தாக்குதல் நடக்கப்போவதாகக் கூறப்பட்டது. அதற்கு வெள்ளோட்டமாக சில நாட்களுக்கு முன்பு தெற்கு மும்பையிலுள்ள பிரமாண்ட அன்டிலியா வீட்டின் அருகே அடையாளம் தெரியாத நபர் ஒருவர் காரை நிறுத்திவிட்டுச் சென்றார். பரபரப்பு ஏற்பட்டதையடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை செய்ததில் அக்காரில் ஜெலட்டின் குச்சிகள் இருந்ததைக் கண்டறிந்தனர்.

Why liberals love to fantasise about a Narendra Modi-Amit Shah split. Five  reasons

இதையடுத்து நேற்று இச்சம்பவத்துக்கு பிரபலமில்லாத ஜெய்ஷ்-உல்-ஹிந்த் என்ற பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுக் கொள்வதாக ஒரு தகவல் பரவியது. அந்த அமைப்பின் டெலிகிராம் கணக்கிலிருந்து வெளியான அத்தகவலில், இது வெறும் டிரெய்லர் தான்; மெயின் பிக்சர் இனிமே தான் ஆரம்பமாகும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. தாக்குதல் நடத்த வேண்டாம் என்றால் கிரிப்டோகரன்சியில் பணம் கொடுக்க வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது. இத்தகவல் நேற்று பரபரப்பாகப் பேசப்பட்டு தலைப்புச் செய்திகளாகவும் இடம்பெற்றன. இச்சூழலில் நாங்கள் பொறுப்பேற்றுக் கொள்ளவில்லை என ஜெய்ஷ்-உல்-ஹிந்த் அமைப்பு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Mumbai Police On Jaish-Ul-Hind Link To Mukesh Ambani Security Scare

இதுகுறித்து அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், “இன்று காலையில் தான் செய்தித்தாள்களைப் பார்த்து இவ்விஷயத்தைத் தெரிந்துகொண்டு அதிர்ந்துபோனோம். தேவையில்லாமல் மார்ஃபிங் செய்து நாங்கள் பொறுப்பேற்றுக்கொண்டதாக தகவல் வெளியிட்ட இந்தியாவின் உளவுத்துறைக்கு எங்களது கண்டனங்களைத் தெரிவிக்கிறோம். இந்தியாவிலுள்ள தொழிலதிபதிர்கள் எங்களின் குறி அல்ல. எங்களுடைய டார்கெட் எப்போதும் பாசிசத்தை வளர்த்தெடுக்கும் மோடியும் பாஜகவும் தான்.

Jaish-ul-Hind behind explosives-laden SUV near Ambani's house: Police |  Business Standard News

இந்தியாவிலிருக்கும் அப்பாவி இஸ்லாமியர்களுக்கு ஆதரவாகவும், மோடியின் செயல்பாடுகளுக்கு எதிராகவே எங்களின் போராட்டம் அமையும். நாங்கள் பணத்திற்காகப் போராடவில்லை. ஷரியாவுக்காகப் போராடுகிறோம். நாங்கள் மதச்சார்பற்ற ஜனநாயகத்திற்காகப் போராடுகிறோம். அம்பானிகளுக்கு எதிராக அல்ல” என்று திட்டவட்டமாகக் கூறியிருக்கிறது.

Minor blast near Israel Embassy in Delhi, note on spot suggests an Iranian  'link' | Cities News,The Indian Express

முன்னதாக, குடியரசு தின விழாவின் இறுதி நிகழ்வான பீட்டிங் தி ட்ரீட்டின் போது டெல்லியிலுள்ள இஸ்ரேல் தூதரகத்தின் அருகே சிறிய குண்டுவெடிப்பு சம்பவம் அரங்கேறியது. இச்சம்பவத்திற்கு ஜெய்ஷ்-உல்-ஹிந்த் அமைப்பு பொறுப்பேற்றுக்கொண்டது கவனித்தக்கது. குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்த சிறிய தூரத்திலான ஒரு இடத்தில் தான் பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஆகியோர் விழாவில் பங்கேற்றிருந்தனர்.

மாவட்ட செய்திகள்

தேர்தல் வீடியோஸ்

- Advertisment -
TopTamilNews