இந்தியாவை உலுக்கிய புல்வாமா தாக்குதலின் ‘மாஸ்டர் மைண்ட்’ பயங்கரவாதி சுட்டுக்கொலை!

 

இந்தியாவை உலுக்கிய புல்வாமா தாக்குதலின் ‘மாஸ்டர் மைண்ட்’ பயங்கரவாதி சுட்டுக்கொலை!

2019ஆம் ஆண்டு இந்திய-பாகிஸ்தான் எல்லையில் புல்வாமா தாக்குதலை எவராலும் மறக்க முடியாது. பிப்ரவரி 14ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரிலுள்ள புல்வாமா பகுதியில் நடந்த தீவிரவாதிகளின் தற்கொலைப் படைத் தாக்குதலில் 44 சிஆர்பிஎஃப் படை வீரர்கள் கொல்லப்பட்டனர். பதிலடி கொடுக்கும் விதமாக, பிப்ரவரி 26ஆம் தேதி இந்திய விமானப்படை, பாகிஸ்தானின் பால்கோட் பகுதிக்குள் நுழைந்து ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் முகாம்கள் மீது மிகக் கடுமையான தாக்குதல் நடத்தின.

இந்தியாவை உலுக்கிய புல்வாமா தாக்குதலின் ‘மாஸ்டர் மைண்ட்’ பயங்கரவாதி சுட்டுக்கொலை!

பிப்ரவரி 27ஆம் தேதி இந்திய எல்லைக்குள் பாகிஸ்தான் விமானப்படையின் விமானம் அத்துமீறி நுழைந்தது. அதை இந்திய வீரர்கள் சுட்டு வீழ்த்தினர். அப்போது நடைபெற்ற சண்டையில் இந்திய விமானம் பாகிஸ்தான் பகுதியின் எல்லைக்குள் கீழே விழுந்து நொறுங்கியது. அதிலிருந்த விமானி அபிநந்தனை பாகிஸ்தான் ராணுவம் சிறைப்பிடித்தது. அபிநந்தனை விடுவிக்குமாறு பல்வேறு உலக நாடுகளும் இந்தியாவும் அழுத்தம் கொடுத்தையடுத்து மார்ச் 1ஆம் தேதி அபிநந்தன் விடுவிக்கப்பட்டார்.

இந்தியாவை உலுக்கிய புல்வாமா தாக்குதலின் ‘மாஸ்டர் மைண்ட்’ பயங்கரவாதி சுட்டுக்கொலை!

இந்த மறக்க முடியாத கொடூரத்தை அரங்கேற்றிய ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த முக்கிய பயங்கரவாதியை இன்று இந்திய பாதுகாப்புப் படை வீரர்கள் சுட்டுக்கொன்றுள்ளனர். புல்வாமா மாவட்டத்தில் நக்பெரன் – தர்சர் வனப்பகுதியில் பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச்சூடு நடந்தது. அப்போது இரு பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். விசாரணையில் கொல்லப்பட்ட ஒருவர் ஜெய்ஷ்-இ- முகமது அமைப்பின் முகமது இஸ்மாயில் ஆல்வி. இவர் தான் புல்வாமா தாக்குதல் நடத்தியதில் மாஸ்டர் மைண்டாக செயல்பட்டவர்.