2 நாளில் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாதிகள் 13 பேர் சுட்டுக்கொலை! – ஆப்கான் அதிரடி

 

2 நாளில் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாதிகள் 13 பேர் சுட்டுக்கொலை! – ஆப்கான் அதிரடி

கடந்த இரண்டு நாட்களில் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த 13 தீவிரவாதிகளை என்கவுண்டர் செய்துள்ளதாக ஆப்கானிஸ்தான் பாதுகாப்புப் படை அறிவித்துள்ளது.

2 நாளில் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாதிகள் 13 பேர் சுட்டுக்கொலை! – ஆப்கான் அதிரடி
காஷ்மீர் பகுதியில் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு வந்த ஜெய்ஷ் இ முகமது அமைப்பு கொஞ்சம் கொஞ்சமாக தன்னுடைய பயங்கரவாதத்தின் எல்லையை அதிகரித்தது. வளர்த்த பாகிஸ்தானுக்கு எதிராக வேலை காட்டிய ஜெய்ஷ் இ முகமது ஆப்கானிஸ்தானிலும் செயல்படத் தொடங்கியது. ஆப்கானிஸ்தானில் ராணுவம் மற்றும் போலீசாருக்கு எதிராக இந்த அமைப்பின் பயங்கரவாதிகள் தொடர்ந்து வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டு வந்தனர்.

2 நாளில் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாதிகள் 13 பேர் சுட்டுக்கொலை! – ஆப்கான் அதிரடிஇந்த நிலையில் பாகிஸ்தான் ஜெய்ஷ் இ முகமது அமைப்பைச் சேர்ந்த 13 பயங்கரவாதிகள் கடந்த இரண்டு நாட்களில் கொல்லப்பட்டனர் என்று ஆப்கானிஸ்தான் அறிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானின் தேசிய பாதுகாப்புப் படை வீரர்கள் மற்றும் தேசிய பாதுகாப்பு இயக்குநரகம் இணைந்து யோக்யானி மாவட்டத்தில் தேடுதல் வேட்டை நடத்தியது. அதில் 13 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர் என்று அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
2019ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக புல்வாமா பகுதியில் சிஆர்பிஎஃப் வீரர்கள் வந்த பஸ் மீது காரை மோதச் செய்தது இந்த அமைப்புதான். இந்த சம்பவத்தில் 40 சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் நாட்டுக்காக உயிர்த்தியாகம் செய்தது குறிப்பிடத்தக்கது.