“ஜெயிலுக்குள்ள கஞ்சா இப்படியா போகுது” -போதையில் தள்ளாடும் சிறைச்சாலைகள்

 

“ஜெயிலுக்குள்ள கஞ்சா இப்படியா போகுது” -போதையில் தள்ளாடும் சிறைச்சாலைகள்

வெளியே கிடைப்பதை விட இப்போதெல்லாம் போதை பொருட்கள் சிறையில் தாராளமாக கிடைக்கிறது என்பதற்கு இந்த சம்பவம் ஒரு உதாரணம்

கடந்த சனிக்கிழமை இரவு ஹரியானா மாநில போதை பொருள் தடுப்பு போலீசாருக்கு

குருகிராமில் உள்ள போண்ட்ஸி சிறைச்சாலைக்குள் கைதிகளுக்கு போதைப்பொருள் வழங்குவதாக ஒரு தகவல் வந்தது .அதனால்   காவல்துறையின் குற்றப்பிரிவுக் குழு நடத்திய அதிரடி சோதனையில் சிறை வார்டன் உட்பட இரண்டு குற்றவாளிகளை கைது செய்துள்ளது . மேலும் அவர்களிடமிருந்து 110 கிராம் சல்பா மற்றும் 24 கிராம் ஸ்மாக் ஆகியவற்றை  மீட்டது.

கைதிகளுக்கு போதை பொருள் வழங்கிய  சிறை வார்டன் ஹரியானாவின் மகேந்திரகர் மாவட்டத்தில் வசிக்கும் பிரேம் சந்த் என்றும் மற்றொருவர்  ரேவாரி மாவட்டத்தைச் சேர்ந்த அங்கித் என்றும் போலீசார் கூறினர் .அவருக்கு எதிராக என்டிபிஎஸ் சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டன என்று போதை தடுப்பு போலீசார் கூறினார்கள்.போலீசார் அவர்களிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல் வெளியானது .

“ஜெயிலுக்குள்ள கஞ்சா இப்படியா போகுது” -போதையில் தள்ளாடும் சிறைச்சாலைகள்

அதன்படி கைதிகளுக்கு போதைப்பொருள் விநியோகிப்பதற்காக சிறையில் தீபக் ஒரு வலையமைப்பை நிறுவியிருந்தார். அவர் தனது சகோதரர் மோட்டோவிடம் தொலைபேசியில் போதைப்பொருள் தேவைப்படுவதாக கூறுவார் .

உடனே தரம்ரிர் அந்தபோதை  பொருளை அங்கிட்டிடம் ஒப்படைப்பார், அதன்பிறகு அவர் சிறை வார்டனுக்கு  வழங்குவார்,” என்று போலீசார் கூறினர்.மேலும், “சிறைக்குள் போதைப்பொருட்களை வழங்குவது பிரேம் சந்தின் பொறுப்பாகும்,”என்று மேலும் அவர்கள் கூறினார்கள் .