முதல்வர் நிதிஷ் குமார் பா.ஜ.க.வின் கைப்பாவையாக இருப்பார்… ராஷ்டிரிய ஜனதா தளம் தாக்கு

முதல்வர் நிதிஷ் குமார் பா.ஜ.க.வின் கைப்பாவையாக இருப்பார்… ராஷ்டிரிய ஜனதா தளம் தாக்கு

பீகார் முதல்வர் நிதிஷ் குமார் பா.ஜ.க.வின் கைப்பாவையாக இருப்பார் என்று ராஷ்டிரிய ஜனதா தளம் தாக்கியுள்ளது.

அண்மையில் நடந்து முடிந்த பீகார் சட்டப்பேரவை தேர்தலில் 125 தொகுதிகளை தேசிய ஜனநாயக கூட்டணி கைப்பற்றியது. இதனையடுத்து நேற்று ஐக்கிய ஜனதா தள தலைவர் நிதிஷ் குமார் தொடர்ந்து 4வது முறையாக முதல்வராக பதவியேற்றார். நிதிஷ் குமார் முதல்வராக பதவியேற்கும் நிகழ்ச்சியில் தேஜஸ்வி யாதவ் தலைமையிலான ராஷ்டிரிய ஜனதா தளம் கலந்து கொள்ளவில்லை.

முதல்வர் நிதிஷ் குமார் பா.ஜ.க.வின் கைப்பாவையாக இருப்பார்… ராஷ்டிரிய ஜனதா தளம் தாக்கு
ஜக்தானந்த் சிங்

ராஷ்டிரிய ஜனதா தள கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஜக்தானந்த் சிங் கூறியதாவது: இந்த அரசாங்கத்தை நாங்கள நம்பவில்லை. இது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் அல்ல. முன்பு அவர் (நிதிஷ் குமார்) துரோகம் மூலம் முதலமைச்சராக இருந்தார். இந்த முறை அவரை முதல்வர் என்று கூட அழைக்க முடியாது. அவர்கள மக்களை ஆணையை கொள்ளையடித்து, அவர்களின் முடிவை அழித்து அரசாங்கத்தை அமைக்க முயற்சிக்கின்றனர்.

முதல்வர் நிதிஷ் குமார் பா.ஜ.க.வின் கைப்பாவையாக இருப்பார்… ராஷ்டிரிய ஜனதா தளம் தாக்கு
பா.ஜ.க.

நிதிஷ் குமார் பா.ஜ.க.வின் கைப்பாவையாக இருப்பார். தன்னை ஒரு சோசலிஸ்ட் என்று அழைக்கும் நிதிஷ் குமார்,மக்களை ஏமாற்றுவதன் மூலம் மக்களின் ஆணையை கேலி செய்துள்ளார். எங்கள் சோசலிச மூதாயைர்கள் யாரும் அதனை கற்பனை செய்து பார்த்ததில்லை. தேசத்தை கொள்ளையடித்த மக்களுக்கு இடையில் உட்கார முடியாது. அவர்கள் செல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். அவர்கள் ஆட்சிக்கு வரக்கூடும். ஆனால் காலம் குறுகியதாகும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.