நான் அதிருப்தியிலும் இல்லை; பிரதமரையும் தனியாக சந்திக்கவில்லை- திமுக எம்.பி ஜெகத்ரட்சகன்

 

நான் அதிருப்தியிலும் இல்லை; பிரதமரையும் தனியாக சந்திக்கவில்லை- திமுக எம்.பி ஜெகத்ரட்சகன்

திமுகவில் தனக்கு எந்த அதிருப்தியும் கிடையாது என அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன் தெரிவித்துள்ளார்.

திமுகவிலிருந்து ஏராளமான எம்.எல்.ஏக்கள் பாஜகவுக்கு செல்லவிருப்பதாகவும், திமுக தலைமையை சிலர் ஏற்கவில்லை என்றும் தகவல்கள் கசிந்தது. மேலும் தலைவர் ஸ்டாலின் மூத்த தலைவர்களிடம் முறையான அணுகுமுறைகளை பின்பற்றவில்லை என்றும் கூறப்படுகிறது. இதனால் சமீபத்தில் கூட சிலர் திமுகவிலிருந்து விலகி பாஜகவில் இணைந்தனர். .

நான் அதிருப்தியிலும் இல்லை; பிரதமரையும் தனியாக சந்திக்கவில்லை- திமுக எம்.பி ஜெகத்ரட்சகன்
இதனிடையே ஜெகத்ரட்சகன் பாஜகவுக்கு செல்லவுள்ளதாக கடந்த வாரம் தகவல் வெளியானது. இது குறித்து தனியார் செய்தி தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் அளித்த பிரத்யேக பேட்டியில், “கட்சி மாறப்போவதாக வந்த செய்தி முற்றிலும் தவறு. சமூக வலைதளங்களில் தேவையின்றி இப்படி வதந்தி பரப்புவர்களுக்கெல்லாம் பதில் சொல்லிக்கொண்டிருக்க முடியாது. நான் அதிருப்தியிலும் இல்லை, பிரதமரையும் தனியாக சந்திக்கவில்லை” என விளக்கம் அளித்துள்ளார்.

ஜெகத்ரட்சகன் அதிக இறை நம்பிக்கை உடையவர். திமுகவில் இருந்தாலும் கூட கோயில் குடமுழுக்கு, உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு தாராளமாக நிதி கொடுக்கக்கூடியவர். மேலும், தமிழ் மொழி மீதும் அதிக பற்றுக்கொண்டவர்