காடுவெட்டி குரு உடலை எடுத்துச் செல்லக்கூட உதவாத ராமதாஸ்! – வைரல் ஆகும் ஜெகத்ரட்சகன் பழைய வீடியோ

காடுவெட்டி குருவின் இரண்டாம் ஆண்டு நினைவுதினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. காடுவெட்டி குருவின் புகைப்படத்தை தரையில் வைத்து டாக்டர் ராமதாஸ் அஞ்சலி செலுத்தியது பற்றி பலரும் கேள்விகளை எழுப்பினர். அதற்கு பா.ம.க-வினர் பதிலடி கொடுத்து வருகின்றனர்.


தி.மு.க-வினர் கடுமையாக பதிவிட்டு வருவதைத் தொடர்ந்து டாக்டர் ராமதாஸ் இன்று ஒரு ட்வீட் வெளியிட்டார். அதில் தமிழகத்தின் பெரிய அரசியல் தலைவர் ஒருவர் பெயரை குறிப்பிட்டு அவரை நம்ப வேண்டாம் என்று கருணாநிதி தன்னிடம் ஒருமுறை கூறியதாக கொளுத்திப்போட்டார்.

இந்த நிலையில் காடுவெட்டி ஜெ.குரு உடலைக் கூட எடுத்துச் செல்ல டாக்டர் ராமதாஸ் உதவவில்லை, நான்தான் ரூ.3 லட்சம் கொடுத்தேன் என்று ஜெகத்ரட்சகன் பேசிய பழைய வீடியோவை தி.மு.க-வினர் தற்போது வைரல் ஆக்கி வருகின்றனர்.
அந்த வீடியோவில் ஜெகத்ரட்சகன், “காடுவெட்டி குரு’ மறைந்து அவர் உடலை மருத்துவமனையிலிருந்து எடுத்துச்செல்ல அவர்கள் குடும்பத்துக்கு மூன்று லட்சம் தேவைப்பட்டது. அதைக்கூட நான் தானே கொடுத்தேன். இதை பெருமைக்காக கூறவில்லை… அந்த பணத்தை நீங்கள் அல்லவா கொடுத்திருக்க வேண்டும். அதேபோல் இட ஒதுக்கீட்டுக்காக உயிர்விட்ட 21 குடும்பங்கள் இன்று தத்தளிக்கின்றன. அவர்களுக்கு ராமதாஸ் ஏதும் செய்திருக்கிறாரா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார் ஜெகத்ரட்சகன். இந்த வீடியோ விக்ரவாண்டி இடைத்தேர்தல் பிரசாரத்தின்போது எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Most Popular

நான் அதிருப்தியிலும் இல்லை; பிரதமரையும் தனியாக சந்திக்கவில்லை- திமுக எம்.பி ஜெகத்ரட்சகன்

திமுகவில் தனக்கு எந்த அதிருப்தியும் கிடையாது என அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன் தெரிவித்துள்ளார். திமுகவிலிருந்து ஏராளமான எம்.எல்.ஏக்கள் பாஜகவுக்கு செல்லவிருப்பதாகவும், திமுக தலைமையை சிலர் ஏற்கவில்லை என்றும் தகவல்கள் கசிந்தது. மேலும் தலைவர்...

65 ஆண்டு கால வரலாற்றில் பவானிசாகர் அணை 26 வது முறையாக 100 அடியை எட்டியது!

1956ம் ஆண்டு கட்டிமுடிக்கப்பட்ட பவானிசாகர் அணை, கடந்த 65 ஆண்டு கால வரலாற்றில் 26 வது முறையாக 100 அடியை எட்டியுள்ளது. 2018, 2019 மற்றும் 2020 என தொடர்ந்து 3 ஆண்டுகள்...

போதையில் தகராறு செய்த கணவனை கொலை செய்த மனைவி!

குடிபோதையில் தொடர்ந்து துன்புறுத்தி வந்த கணவனை மனைவி கொலை செய்த சம்பவம் சேலம் மாவட்டம் ஓமலூரில் நிகழ்ந்துள்ளது. பெரியேரிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சுந்தரவேல் என்பவர் போதைக்கு அடிமையான நிலையில் மது அருந்திவிட்டு வீட்டில் தகராறில்...

கேரளாவில் 7 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்

கேரளாவில் இடுக்கி உள்ளிட்ட 7 மாவட்டங்களில் மிக மிக கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, கேரளாவின் இடுக்கி, வயநாடு, ஆலப்புழா, காசர்கோடு கோழிக்கோடு, மலப்புரம், கண்ணூர் ஆகிய மாவட்டங்களில்...