Koo செயலியில் இணைந்தார் ஆந்திர முதல்வர்… ட்விட்டரை எதிர்க்கிறாரா ஜெகன் மோகன்?

 

Koo செயலியில் இணைந்தார் ஆந்திர முதல்வர்… ட்விட்டரை எதிர்க்கிறாரா ஜெகன் மோகன்?

டெல்லி விவசாயிகள் போராட்டத்திலிருந்தே ட்விட்டருக்கும் மத்திய அரசுக்கும் உரசல்கள் ஏற்பட்டு வருகின்றன. அரசுக்கு எதிராக கருத்து சொல்பவர்களின் ட்விட்டர் கணக்குகளை முடக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டது. ஆனால் அது கருத்து சுதந்திரத்துக்கு எதிரானது என்று கூறி கணக்குகளை முடக்க ட்விட்டர் மறுத்தது. அப்போதிருந்தே ட்விட்டருக்கும் மத்திய அரசுக்கும் ஏழாம் பொருத்தமாக இருக்கிறது. அதேபோல மத்திய அரசு கொண்டுவந்த புதிய ஐடி விதிகளுடன் ட்விட்டரை தவிர மற்ற சமூக வலைதள நிறுவனங்களும் இணங்கின.

Koo செயலியில் இணைந்தார் ஆந்திர முதல்வர்… ட்விட்டரை எதிர்க்கிறாரா ஜெகன் மோகன்?

ஆனால் ட்விட்டர் மட்டும் அரசுக்கு தண்ணி காட்டி வந்தது. மாறாக புதிய விதிகள் இந்தியர்களின் கருத்துரிமைக்கு எதிராக இருப்பதாக குற்றஞ்சாட்டியது. ட்விட்டரின் தொடர் மோதல் போக்கை அடுத்து மத்திய அரசு ட்விட்டருக்கு எதிராக இந்திய செயலி ஒன்றை ஊக்குவிக்க விரும்பியது. அதன்படி ட்விட்டருக்கு எதிராக முழுக்க முழுக்க இந்தியாவில் தயாரான இந்தியர்களுக்குச் சொந்தமான கூ (Koo) செயலியைப் பிரதானப்படுத்தியது. இந்தச் செயலியில் ட்விட்டரில் இருக்கும் அனைத்து அம்சங்களும் உள்ளன.

ட்விட்டர் மத்திய அரசுடன் இணக்கமாக செல்லாததால் மத்திய அமைச்சர்களாக இருப்பவர்கள் கூ செயலியைப் பிரபலப்படுத்தும் நோக்கில் இறங்கினர். அதன் முதல் படியாக அமைச்சர் பியூஸ் கோயல், முன்னாள் அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் உள்ளிட்டோர் கூ சோசியல் மீடியாவில் தங்களது கணக்குகளைத் துவங்கினர். மேலும் அவற்றில் அனைவரும் கூ செயலியைப் பயன்படுத்துமாறும் கேட்டுக்கொண்டனர். இவ்வளவு ஏன் கடந்த ஆண்டு மன் கி பாத் நிகழச்சியில் பேசிய பிரதமர் மோடி கூட கூ செயலி மூலம் மக்கள் தங்களுடைய தாய்மொழியில் பேசலாம், தகவல் பரிமாறலாம், குரல்களை பகிரலாம் என்று கூறியிருந்தார்.

Koo செயலியில் இணைந்தார் ஆந்திர முதல்வர்… ட்விட்டரை எதிர்க்கிறாரா ஜெகன் மோகன்?

இந்தியாவில் வெறும் 10 சதவீதம் பேர் மட்டுமே ஆங்கிலம் பேசுகிறார்கள். சுமார் 100 கோடி பேருக்கு ஆங்கிலம் தெரியாது. அவர்களின் கைகளில் ஸ்மார்ட்போன்கள் உலாவினாலும் இணையதளத்தில் பெரும்பாலான தகவல்கள் ஆங்கிலத்தில் மட்டுமே உள்ளன. இதனால் அவர்கள் தாய் மொழியில் தகவல்களைப் பெற முடிவதில்லை. இதை முன்வைத்தே கூ நிறுவனம் மக்களிடையே தங்களை விளம்பரப்படுத்திக் கொள்கிறது. தாங்கள் இந்தியர்களின் குரலைக் கேட்க விரும்புவதாகக் கூறுகிறார்கள்.

Koo செயலியில் இணைந்தார் ஆந்திர முதல்வர்… ட்விட்டரை எதிர்க்கிறாரா ஜெகன் மோகன்?

தற்போது இதே காரணங்களை முன்வைத்து கூ செயலியில் தனது புதிய கணக்கைத் துவங்கியுள்ளார் ஆந்திரப் பிரதேச முதலமைச்சரான ஜெகன்மோகன் ரெட்டி. அதேபோல முதலமைச்சர் அலுவலகத்திற்கென தனியாக ஒரு கணக்கு, ஆந்திரப் பிரதேச மாநில டிஜிட்டல் கழகத்திற்கு ஒரு கணக்கு என மொத்தமாக மூன்று கணக்குகளைத் தொடங்கியிருக்கிறார். ஆந்திர மக்களுக்கு தாய் மொழியான தெலுங்கில் அரசுடன் தொடர்புகொள்வதற்கும் தகவல்களைப் பரிமாறுவதற்கும் அதிகாரம் அளிப்பதை நோக்கமாகக் கொண்டு கூ கணக்கு தொடங்கியிருக்கிறார். அரசு துறைகளின் கூ கணக்குகள் மாநிலத்தின் தற்போதைய செயல்பாடுகள் குறித்து மக்களுக்குத் தகவல் தெரிவிக்கும் தளமாகச் செயல்படும் என்று கூறப்பட்டுள்ளது.