ஜாப்னா Vs தம்பள்ளை வைக்கிங் – இறுதி போட்டிக்கு செல்வது எது? @LPL

 

ஜாப்னா Vs தம்பள்ளை வைக்கிங் – இறுதி போட்டிக்கு செல்வது எது? @LPL

இலங்கையில் LPL போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்தத் தொடரில் கண்டி டஸ்கஸ், கொழும்பு கிங்ஸ், தம்புள்ளை வைக்கிங் , ஜாப்னா ஸ்டாலியன்ஸ், காலி கிளாடியேட்டர்ஸ் ஆகிய ஐந்து அணிகள் விளையாடுகின்றன.

இதில் கண்டி அணி மட்டும் அரையிறுதிப் போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டது. மற்ற அணிகள் அரையிறுதியில் மோதுகின்றன. நேற்று இரவு நடந்த முதல் அரையிறுதிப் போட்டியில் அரையிறுதிப் போட்டியில் கொழும்பு கிங்ஸ் அணியோடு மோதியது காலி கிளாடியேட்டர்ஸ் அணி.

ஜாப்னா Vs தம்பள்ளை வைக்கிங் – இறுதி போட்டிக்கு செல்வது எது? @LPL

கொழும்பு அணி வெல்லும் எனப் பலரும் கணித்திருந்த நிலையில் அசத்தலான வெற்றியைப் பெற்றது காலி கிளாடியேட்டர்ஸ் அணி. அதனால் இறுதிப்போட்டிக்குத் தகுதிப் பெற்றது காலி கிளாடியேட்டர்ஸ்.

இன்று இரண்டாம் அரையிறுதிப் போட்டி. இன்றைய போட்டி ஜாப்னா ஸ்டாலியன்ஸ் Vs தம்பள்ளை வைக்கிங் என்று அமைந்திருக்கிறது.

ஜாப்னா Vs தம்பள்ளை வைக்கிங் – இறுதி போட்டிக்கு செல்வது எது? @LPL

இரண்டு அணிகளில் தம்புள்ளை அணியே 5 போட்டிகளில் வெற்றி வாகை சூடி அதிக பாயிண்டுகளோடு இருக்கிறது. ஜாப்னா அணி 4 போட்டிகளில் வென்றிருக்கிறது. டிராவில் முடிந்த போட்டி இந்த இரு அணிகளுக்கு இடையேயான போட்டியே. அதனால் இன்றைய போட்டியில் விறுவிறுப்புக்குப் பஞ்சம் இருக்காது.