வாவ்… ஜடேஜாவின் அசத்தலான ரன் அவுட்! ஆஸ்திரேலியா ஸ்கோர் 338!

 

வாவ்… ஜடேஜாவின் அசத்தலான ரன் அவுட்! ஆஸ்திரேலியா ஸ்கோர் 338!

இந்தியா – ஆஸ்திரேலியா இரு அணிகளுக்கு இடையேயான, ஒருநாள் போட்டித் தொடரை 2:1 எனும் கணக்கில் ஆஸ்திரேலியாவும், டி20 போட்டித் தொடரை 2:1 எனும் கணக்கில் இந்தியாவும் வென்றது.

இதுவரை முடிந்த இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒருமுறை வெற்றி பெற்றுள்ளன. நேற்று தொடங்கிய மூன்றாம் டெஸ்ட் போட்டியில் முதல் பேட்டிங் ஆஸ்திரேலியா அணி.

வாவ்… ஜடேஜாவின் அசத்தலான ரன் அவுட்! ஆஸ்திரேலியா ஸ்கோர் 338!

புகோவ்ஸ்கி, டேவிட் வார்னர் ஓப்பனிங் இறங்கினர். 5 ரன்கள் எடுத்த நிலையில் வார்னைத் தூக்கினார் முகம்மது சிராஜ். லபுஷேன் – புகோவ்ஸ்கி ஜோடி நன்கு ஆடியது. புகோவ்ஸ்கி 62, லபுஷேன் 91 ரன்கள் அடித்தனர். லபுஷேன் சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஜடேஜா பந்து வீச்சில் விக்கெட்டைப் பறிக்கொடுத்தார்.

ஸ்டீவ் ஸ்மீத் நங்கூரம் பாய்ச்சியதைப் போல ஆடிக்கொண்டிருந்தார். சதம் அடித்தும் நிதானமாக நிலைத்து ஆடிக்கொண்டிருந்தார். ஆனால், ரன் எடுக்க விரைகையில் ஜடேஜாவின் த்ரோ ஸ்மித்தை அவுட்டாக்கியது. ஜடேஜாவின் அந்த ரன் அவுட் இல்லையெனில், நல்ல ஃபார்மில் இருந்த ஸ்மித் இரட்டை சதம் அடித்திருக்கக்கூட வாய்ப்பிருக்கிறது. ஆஸ்திரேலியா ஸ்கோரைக் கட்டுப்படுத்தியதில் ஜடேஜாவின் அந்த ரன் அவுட்டுக்கு முக்கிய பங்கு இருக்கிறது.

வாவ்… ஜடேஜாவின் அசத்தலான ரன் அவுட்! ஆஸ்திரேலியா ஸ்கோர் 338!

அதற்கு அடுத்த வீரர் பெரிய அளவில் ரன்கள் சேர்க்க வில்லை. மாத்யூ வேட் 13, க்ரீன் 0, டிம் 1, கம்மின்ஸ் 0, ஸ்டார்க் 24, லயன் 0 என நடையக் கட்டினார்கள். 105.4 ஓவர்களில் ஆஸ்திரேலிய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 338 ரன்கள் எடுத்தது.

வாவ்… ஜடேஜாவின் அசத்தலான ரன் அவுட்! ஆஸ்திரேலியா ஸ்கோர் 338!

பிரமாதமான ரன் அவுட் செய்த ஜடேஜா தனது பவுலிங்கில் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். அதுவும் வேட், கம்மின்ஸ் எனும் பெரிய விக்கெட்டுகள். பும்ரா, சைனி தலா 2 விக்கெட்டுகள், சிராஜ் 1 விக்கெட்டையும் வீழ்த்தினார். அஸ்வினுக்கு விக்கெட் ஏதும் விழ வில்லை.

அடுத்து ஆடி வரும் இந்திய அணியில் ரோஹித் ஷர்மாவும் சுப்னம் கில்லும் ஓப்பனிங் இறங்கியுள்ளார்கள். 24 ஓவர் முடிவில் ரோஹித் 24, கில் 31 ரன்கள் எடுத்த நிலையில் அணியின் ஸ்கோர் 61.

வாவ்… ஜடேஜாவின் அசத்தலான ரன் அவுட்! ஆஸ்திரேலியா ஸ்கோர் 338!

தொடர்ந்து ஆடியபோது ரோஹித் ஷர்மா 26 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து களம் இறங்கியிருப்பவர் புஜாரா.