“எள்ளளவும் மாற்றமில்லாமல் வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளார்” – முதல்வர் ஸ்டாலினுக்கு ஜாக்டோ-ஜியோ புகழாரம்!

“எள்ளளவும் மாற்றமில்லாமல் வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளார்” – முதல்வர் ஸ்டாலினுக்கு ஜாக்டோ-ஜியோ புகழாரம்!

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த மாதம் 13ஆம் தேதி தொடங்கியது. பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு தற்போது மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. தினந்தோறும் துறை சார்ந்த அமைச்சர்கள் புதிதாக தொடங்கப்படவுள்ள திட்டங்கள் உள்ளிட்ட அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றன. அதேபோல முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவை 110 விதியின் கீழ் பல்வேறு அறிவிப்புகளை வெளியிடுகிறார். இன்றைய அறிவிப்பில் அவர், “அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி உயர்வு ஜனவரி 1, 2022 முதல் அமலுக்கு வரும். இதன் மூலமாக 16 லட்சம் பேர் பயன்பெறுவார்கள்.

“எள்ளளவும் மாற்றமில்லாமல் வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளார்” – முதல்வர் ஸ்டாலினுக்கு ஜாக்டோ-ஜியோ புகழாரம்!

சத்துணவு ஊழியர்களின் ஓய்வு வயது 58லிருந்து 60ஆக நீட்டிக்கப்படும். அரசு பள்ளிகளில் காலியாக உள்ள இடைநிலை ஆசிரியர்கள் பணிகள் நிரப்பப்படும்.போராட்ட காலங்களில் ஆசிரியர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் வாபஸ் செய்யப்படும். ஸ்டிரைக்கில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் வேலைநிறுத்த காலம், பணிநீக்க காலம் வேலை நாட்களாக கருதப்படும். போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களுக்கு பணி மாறுதல் வழங்கப்பட்டால் மீண்டும் அதே இடத்தில் பணி வழங்கப்படும்” என்றார்.

“எள்ளளவும் மாற்றமில்லாமல் வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளார்” – முதல்வர் ஸ்டாலினுக்கு ஜாக்டோ-ஜியோ புகழாரம்!

இந்த அறிவிப்புகளுக்கு அரசு ஊழியர்கள் சங்கமான ஜாக்டோ-ஜியோ நன்றி தெரிவித்துள்ளது. அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், “இன்றைய தினம் தமிழக முதல்வர் சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் ஆசிரியர்கள்- அரசு ஊழியர்கள் தொடர்பாக 13 அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அவரின் அறிவிப்புகளுக்கு ஜாக்டோ – ஜியோ நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது. தமிழக முதல்வர் போராட்டக் காலத்தில் அளித்த வாக்குறுதிகளை எள்ளளவும் மாற்றாமல் நிறைவேற்றி உள்ளார் என்பதனைக் காட்டுகிறது. பிரதான கோரிக்கையான பழைய ஓய்வூதியத் திட்டத்தையும் நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.