• December
    13
    Friday

Main Area

Main



பலாப்பழ பொரியல்

பலாப்பழ பொரியல்
பலாப்பழ பொரியல்

தேவையான பொருட்கள்
பலாச்சுளைகள்      - 10
பலாக்கொட்டை  - 10
பச்சை மிளகாய்  - 3
பெரிய வெங்காயம் - 2
கேரட்                - 2
மிளகாய்தூள்   - 2டீஸ்பூன்
மஞ்சள் தூள்     - 1/2டீஸ்பூன்
உப்பு                 -தேவையான அளவு

செய்முறை

jackfruit fries

முதலில் பலா பழத்தின் விதை , கேரட், வெங்காயம் ஆகியவைகளை சிறிதாக நறுக்கிக் கொள்ளுங்கள் அடுத்து பலாச் சுளைகளை சிறிது சிறிதாக வெட்டிக் கொள்ளுங்கள். இப்போது அடுப்பில் சின்ன பாத்திரத்தில் அளவான தண்ணீர்  ஊற்றி கொதிக்கும் போது பலாவிதை மற்றும் சுளைகளை போட்டு வேக வையுங்கள். நன்கு வேகும் போது மிளகாய்தூள், மஞ்சள் தூள் அளவான உப்பையும் சேர்த்து வற்ற வைத்து இறக்குங்கள். வாணலியில் எண்ணெய் காய்ந்ததும்,கடுகு, உளுத்தம் பருப்பு தாளித்து வெங்காயத்தை வதக்கி கிளறுங்கள். அத்தோடு தனியாக வேக வைத்து எடுத்து பச்சை மிளகாய் கேரட்டை சேர்த்து வதங்கிய கலவையை பலாவிதை கலவையுடன் சேர்த்து விட்டு கிளறுங்கள். சாப்பிட வித்தியாசமாகவும், சுவையாகவும் இருக்கும். உடலுக்கு துவர்ப்பு சத்துக்களும் கிடைக்கும்.

2018 TopTamilNews. All rights reserved.