தாமரையை மலர செய்து மம்தா பானர்ஜியின் சர்வாதிகார ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டும்.. ஜே.பி. நட்டா

தாமரையை மலர செய்து மம்தா பானர்ஜியின் சர்வாதிகார ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டும்.. ஜே.பி. நட்டா

மேற்கு வங்கத்தில் தாமரை மலர செய்து செய்வதன் மூலம் மம்தா பானர்ஜியின் ஆட்சியின்கீழ் நிலவும் திருப்திப்படுத்துதல் மற்றும் சர்வாதிகாரத்துக்கு முடிவு கட்ட வேண்டும் என ஜே.பி. நட்டா தெரிவித்தார்.

மேற்கு வங்கம் நார்த் தினாஜ்பூரில் பா.ஜ.க. வேட்பாளரை ஆதரித்து நடந்த ஊர்வலத்தில் அந்த கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா கலந்து கொண்டார். அப்போது ஒரு கூட்டத்தில் ஜே.பி. நட்டா பேசுகையில் கூறியதாவது: மேற்கு வங்கத்தில் நடக்கும் இந்த தேர்தல் உண்மையான மாற்றம் மற்றும் மாநிலத்தை தங்க வங்காளமாக மாற்றுவதற்காக நடக்கிறது.

தாமரையை மலர செய்து மம்தா பானர்ஜியின் சர்வாதிகார ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டும்.. ஜே.பி. நட்டா
பா.ஜ.க.

தாமரை மலர செய்து, கிருஷ்ணா, கல்யாணியை வெற்றிபெற செய்வதன் மூலம் மம்தா பானர்ஜியின் ஆட்சியின்கீழ் நிலவும் பணம் பறித்தல், திருப்திப்படுத்துதல் மற்றும் சர்வாதிகாரம் ஆகியவற்றுக்கு முடிவு கட்ட வேண்டும். நண்பர்களே நீங்கள் கிளம்புவதற்கு முன், மேற்கு வங்கத்தின் மற்ற பகுதிகளிலும் வெற்றி பெறுவது போலவே, தினாஜ்பூர் மற்றும் ராய்கஞ்சியில் நீங்கள் பா.ஜ.க.வுக்கு வாக்களித்து வெற்றி பெறச்செய்வீர்கள் என்ற வாக்குறுதியை உங்களிடமிருந்து பெற விரும்புகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தாமரையை மலர செய்து மம்தா பானர்ஜியின் சர்வாதிகார ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டும்.. ஜே.பி. நட்டா
மம்தா பானர்ஜி (கோப்புப்படம்)

மேற்கு வங்கத்தில் 294 உறுப்பினர்களை கொண்ட அம்மாநில சட்டப்பேரவைக்கு புதிய உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் மொத்தம் 8 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதுவரை 5 கட்ட தேர்தல்கள் நடந்து முடிந்துள்ளது. வரும் 22ம் தேதியன்று 6ம் கட்ட தேர்தல் நடைபெற உள்ளது.