பலருக்கு ஒரு குடும்பம்தான் கட்சி… ஆனால் பா.ஜ.க.வுக்கு கட்சிதான் குடும்பம்.. காங்கிரஸை கிண்டலடித்த ஜே.பி. நட்டா

 

பலருக்கு ஒரு குடும்பம்தான் கட்சி… ஆனால் பா.ஜ.க.வுக்கு கட்சிதான் குடும்பம்.. காங்கிரஸை கிண்டலடித்த ஜே.பி. நட்டா

பல கட்சிகளுக்கு ஒரு குடும்பம்தான் கட்சியாக உள்ளது. ஆனால் பா.ஜ.க.வுக்கு கட்சிதான் குடும்பம் என்று காங்கிரஸ் மற்றும் மாநில கட்சிகளை பா.ஜ.க.வின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா தெரிவித்தார்.

உத்தரகாண்டில் பா.ஜ.க.வின் புதிய அலுவலகம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் வீடியோ கான்பரன்சிங் வாயிலாக அந்த கட்சியில் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா கலந்து கொண்டார். அந்த விழாவில் ஜே.பி. நட்டா பேசுகையில் கூறியதாவது: ஒரு கட்சி அலுவலகம் தனது தொண்டர்களுக்கு மதிப்பு அளிக்கிறது.

பலருக்கு ஒரு குடும்பம்தான் கட்சி… ஆனால் பா.ஜ.க.வுக்கு கட்சிதான் குடும்பம்.. காங்கிரஸை கிண்டலடித்த ஜே.பி. நட்டா
பா.ஜ.க.

ஒரு கட்சி அலுவலகம் தலைவரின் வீட்டில் நடத்தப்பட்டால் அப்புறம் அந்த கட்சி அந்த நபருக்கு சொந்தமானதாக ஆகிவிடும். இதை மற்ற கட்சிகளில் பார்த்து இருக்கலாம். அங்கு குடும்பம்தான் கட்சியாகி விட்டது. ஆனால் நம் விஷயத்தில் நமது கட்சிதான் நமக்கு குடும்பம். நம் நாட்டில் இதர அரசியல் கட்சிகளை உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம். அவர்கள் (கட்சிகள்) குடும்பமாக சுருங்கி விட்டன.

பலருக்கு ஒரு குடும்பம்தான் கட்சி… ஆனால் பா.ஜ.க.வுக்கு கட்சிதான் குடும்பம்.. காங்கிரஸை கிண்டலடித்த ஜே.பி. நட்டா
காங்கிரஸ்

காங்கிரஸ் அல்லது இதர மாநில கட்சிகளாக இருந்தாலும் சரி, உள்ள மக்கள் சகோதரர்கள், சகோதரிகள், அம்மாக்கள் மற்றும் மகன்களை பாதுகாப்பதில் பிசியாக உள்ளனர். மருமகன்களுடன் மோதல் உள்ளன. ஆனால் உலகின் மிகப்பெரிய கட்சியான பா.ஜ.க. குடும்பம் போல் ஒன்றாக இணைந்து நிற்கிறது. வரும் 50 ஆண்டுகளில் உத்தரகாண்ட் பா.ஜ.க. அலுவலகம் நவீன வசதிகள் கொண்டதாக இருக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.