ஜெயலலிதா இல்லத்தை அரசுடைமையாக்க விட மாட்டேன் : ஜெ.தீபா

 

ஜெயலலிதா இல்லத்தை அரசுடைமையாக்க விட மாட்டேன் : ஜெ.தீபா

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் ரூ.900 கோடி மதிப்பிலான சொத்துக்களை நிர்வகிக்க நிர்வாகியை நியமிக்க வேண்டும் என்று அதிமுகவை சேர்ந்த புகழேந்தி கடந்த ஆண்டு வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கில் ஜெயலலிதாவின் அண்ணன் மகன் மற்றும் மகள் எதிர்மனுதாரர்களாக சேர்க்கப்பட்ட நிலையில், தங்களை சட்டப்பூர்வ வாரிசுகளாக அறிவிக்க வேண்டும் என்று தீபக் மற்றும் தீபா மனு அளித்திருந்தனர்.

ஜெயலலிதா இல்லத்தை அரசுடைமையாக்க விட மாட்டேன் : ஜெ.தீபா

இந்த வழக்கு விசாரணை முடிவடைந்து, ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை முழுமையாக நினைவில்லமாக மாற்றும் முடிவை அரசு பரிசீலனை செய்ய வேண்டும் என்றும் இல்லத்தின் ஒரு பகுதியை நினைவு இல்லமாகவும் மற்றொரு பகுதியை முதல்வரின் அதிகாரப் பூர்வமான இல்லமாக மாற்றவும் நீதிமன்றம் பரிந்துரைத்தது. மேலும், ஜெயலலிதாவுக்கு திருமணம் ஆகாததால் அவரது அண்ணன் மகள் தீபா மற்றும் மகன் தீபக் ஆகியோரை நேரடி வாரிசுகளாக நியமித்து உத்தரவிட்டது.

ஜெயலலிதா இல்லத்தை அரசுடைமையாக்க விட மாட்டேன் : ஜெ.தீபா

இதையடுத்து ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தை விலைக்கு வாங்க 68 கோடியை தமிழக அரசு டெபாசிட் செய்தது . சென்னை சிவில் நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் 68 கோடி டெபாசிட் செலுத்தப்பட்டுள்ளது. வருமான வரித்துறைக்கு ஜெயலலிதா செலுத்த வேண்டிய 36 கோடி , வாரிசுகளான தீபக் மற்றும் தீபாவிற்கு நிவாரணமாக 32 கோடி ரூபாய் என 68 கோடி ரூபாயை அரசு செலுத்தியுள்ளது. ஒரு சதுர அடி 12,060 ரூபாய் என்ற அடிப்படையில் இந்த தொகையானது செலுத்தப்பட்டுள்ளது.

டெபாசிட் தொகையை செலுத்தியதால் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வசித்த வேதா இல்லம் அரசுடமையானது என தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த நிலையில் இது குறித்து பேசிய ஜெ.தீபா, ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை கைவிட மாட்டேன், மீண்டும் சட்ட போராட்டம் தொடரும். இது முடிவல்ல ஆரம்பம் தான் என்று கூறியிருக்கிறார். மேலும், அதிமுக தலைமை அலுவலகத்தை நாங்கள் கேட்டோமா அல்லது வழக்கு தொடர்ந்தோமா என்றும் அவரது மரணம் எதிர்பாராதது, இல்லையெனில் அவர் உயில் எழுதி வைத்திருப்பார் என்றும் கூறியுள்ளார்.