ஜெயலலிதாவின் அனைத்து சொத்துக்காகவும் போராடுவேன்: ஜெ. தீபா

 

ஜெயலலிதாவின் அனைத்து சொத்துக்காகவும் போராடுவேன்: ஜெ. தீபா

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் சொத்துக்களுக்கு இரண்டாம் நிலை வாரிசாக ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ. தீபாவை சென்னை உயர் நீதிமன்றம் அறிவித்ததை தொடர்ந்து அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், “ஜெயலலிதாவின் சட்டப்பூர்வ வாரிசாக எங்களை உயர்நீதிமன்றம் அறிவித்திருப்பது வரலாற்று சிறப்புமிக்க ஒன்று. ஜெயலலிதாவின் இல்லத்தை கையகப்படுத்தும் ஆளுநரின் அவசர சட்டம் செல்லாது. நினைவிடம் உருவாக்குவதில் மக்களுக்கு எந்த பயனும் இல்லை என்று நீதிமன்றம் கூறியுள்ளது. அப்படியே அது ஏற்றுக்கொள்ள பட்டாலும் மேல் முறையீடு செய்வோம்.

ஜெயலலிதாவின் அனைத்து சொத்துக்காகவும் போராடுவேன்: ஜெ. தீபா

அடுத்த கட்டமாக நாங்கள் வேதா இல்லம் செல்ல முறையான நடவடிக்கைகளை எடுத்து செல்வோம். அவரின் அனைத்து சொத்துக்களையும் பாதுகாக்கும் கடமை எங்களுக்கு உள்ளது. அதற்காக நாங்கள் நிச்சயமாக போராடுவோம். இந்த மாதிரி ஒரு அநீதி தமிழ்நாட்டில் வேறு யாருக்கும் வர கூடாது. எனக்கும் என் அண்ணனுக்கும் இதில் எல்லா ஒற்றுமையும் இருக்கிறது. எங்களுக்குள் கருத்து வேறுபாடு இல்லை” என தெரிவித்தார்.

இதைதொடர்ந்து தீபா மற்றும் தீபக் ஆகியோர் சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள மறைந்த முன்னால் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.