வேதா இல்லம் எங்களது பூர்வீக சொத்து; அரசு எடுத்துக் கொள்வதில் உடன்பாடில்லை : ஜெ.தீபா பேட்டி

 

வேதா இல்லம் எங்களது பூர்வீக சொத்து; அரசு எடுத்துக் கொள்வதில் உடன்பாடில்லை : ஜெ.தீபா பேட்டி

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் ரூ.900 கோடி மதிப்பிலான சொத்துக்களை நிர்வகிக்க நிர்வாகியை நியமிக்க வேண்டும் என்று அதிமுகவை சேர்ந்த புகழேந்தி கடந்த ஆண்டு வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணை முடிவடைந்து, ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை முழுமையாக நினைவில்லமாக மாற்றும் முடிவை அரசு பரிசீலனை செய்ய வேண்டும் என்றும் இல்லத்தின் ஒரு பகுதியை நினைவு இல்லமாகவும் மற்றொரு பகுதியை முதல்வரின் அதிகாரப் பூர்வமான இல்லமாக மாற்றவும் நீதிமன்றம் பரிந்துரைத்தது. மேலும், ஜெயலலிதாவுக்கு திருமணம் ஆகாததால் அவரது அண்ணன் மகள் தீபா மற்றும் மகன் தீபக் ஆகியோரை நேரடி வாரிசுகளாக நியமித்து உத்தரவிட்டது.

வேதா இல்லம் எங்களது பூர்வீக சொத்து; அரசு எடுத்துக் கொள்வதில் உடன்பாடில்லை : ஜெ.தீபா பேட்டி

இதையடுத்து ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தை விலைக்கு வாங்க 68 கோடியை தமிழக அரசு டெபாசிட் செய்தது. வருமான வரித்துறைக்கு ஜெயலலிதா செலுத்த வேண்டிய 36 கோடி , வாரிசுகளான தீபக் மற்றும் தீபாவிற்கு நிவாரணமாக 32 கோடி ரூபாய் என 68 கோடி ரூபாயை அரசு செலுத்தியுள்ளது. டெபாசிட் தொகையை செலுத்தியதால் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வசித்த வேதா இல்லம் அரசுடமையானது என தமிழக அரசு அறிவித்தது.

இந்த நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், வேதா இல்லம் எங்களது பூர்வீக சொத்து. அதனை அரசு எடுத்துக் கொள்வதில் எங்களுக்கு உடன்பாடில்லை என்றும் ஜெயலலிதாவால் வாங்கப்பட்ட கடனுக்கு நாங்கள் தான் பொறுப்பேற்றுள்ளோம் என்றும் ஜெயலலிதாவின் வேதா இல்லத்திற்கான மதிப்பீடு தொகை ரூ.68 கோடி என்பது தவறானது என்றும் கூறினார்.

தொடர்ந்து, வேதா இல்லத்திற்குள் இருக்கும் பொருட்களின் விவரங்களை அரசு வெளியிடாதது ஏன் என்று கேள்வி எழுப்பிய அவர், ஜெயலலிதாவின் வின் வாரிசாக எங்களை நீதிமன்றமே அறிவித்துள்ள நிலையில் எங்களுக்கே உரிமை உள்ளது என்றும் கூறினார். மேலும், ஜெயலலிதா குடும்ப நிகழ்ச்சிகள் அனைத்தும் வேதா இல்லத்தில் தான் நடைபெற்றதால் அதனை மீட்டெடுக்க சட்டப்படி போராடுவேன் என்றும் கூறினார்.