முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வேதா இல்லம் அரசுடைமை ஆக்கப்பட்டதை எதிர்த்து ஜெ.தீபா மனு

 

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வேதா இல்லம் அரசுடைமை ஆக்கப்பட்டதை எதிர்த்து ஜெ.தீபா மனு

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் ரூ.900 கோடி மதிப்பிலான சொத்துக்களை நிர்வகிக்க நிர்வாகியை நியமிக்க வேண்டும் என்று அதிமுகவை சேர்ந்த புகழேந்தி கடந்த ஆண்டு வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணை முடிவடைந்து, ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை முழுமையாக நினைவில்லமாக மாற்றும் முடிவை அரசு பரிசீலனை செய்ய வேண்டும் என்றும் இல்லத்தின் ஒரு பகுதியை நினைவு இல்லமாகவும் மற்றொரு பகுதியை முதல்வரின் அதிகாரப் பூர்வமான இல்லமாக மாற்றவும் நீதிமன்றம் பரிந்துரைத்தது. மேலும், ஜெயலலிதாவுக்கு திருமணம் ஆகாததால் அவரது அண்ணன் மகள் தீபா மற்றும் மகன் தீபக் ஆகியோரை நேரடி வாரிசுகளாக நியமித்து உத்தரவிட்டது. இதையடுத்து ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தை விலைக்கு வாங்க 68 கோடியை தமிழக அரசு டெபாசிட் செய்தது. வருமான வரித்துறைக்கு ஜெயலலிதா செலுத்த வேண்டிய 36 கோடி , வாரிசுகளான தீபக் மற்றும் தீபாவிற்கு நிவாரணமாக 32 கோடி ரூபாய் என 68 கோடி ரூபாயை அரசு செலுத்தியுள்ளது. டெபாசிட் தொகையை செலுத்தியதால் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வசித்த வேதா இல்லம் அரசுடமையானது என தமிழக அரசு அறிவித்தது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வேதா இல்லம் அரசுடைமை ஆக்கப்பட்டதை எதிர்த்து ஜெ.தீபா மனு

இந்த நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வேதா இல்லம் அரசுடைமை ஆக்கப்பட்டதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார். கீழமை நீதிமன்றத்தில் அரசு செலுத்தியுள்ள தொகையில் வருமானவரி நிலுவையை வசூலிக்கவும் தடை விதிக்க வேண்டுமென்றும், வேதா இல்லத்தின் அசையும் சொத்துக்களை பறிமுதல் செய்ய அரசுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் ஜெ.தீபா தாக்கல் செய்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.