ஜெ.அன்பழகன் மறைவு: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரங்கல்!

 

ஜெ.அன்பழகன் மறைவு: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரங்கல்!

சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி எம்எல்ஏவாக இருந்தவர் 62 வயதான அன்பழகன். அன்பழகன் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு மிகவும் நெருக்கமாக இருந்தவர். திரைப்படத் தயாரிப்பாளரும் விநியோகஸ்தரும் இருந்த இவர் திமுக கட்சி பணியில் தீவிரமாக பணியாற்றி வந்தார்.

ஜெ.அன்பழகன் மறைவு: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரங்கல்!

அன்பழகன் மூன்று முறை எம்எல்ஏவாக இருந்த அவர் 2001 இல் தி.நகரிலும் 2011 மற்றும் 16 இல் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் வெற்றி பெற்றார். 15 ஆண்டுகளுக்கு மேலாக திமுகவின் மாவட்ட செயலாளராக இருந்த இவர் கட்சி பணிகளை திறம்பட செய்து முடித்து தலைமையிடம் பாராட்டு தருவதில் வல்லவர் கருத்துக்களை துணிச்சலாக கட்சித் தலைமையிடம் தெரிவிக்க குணம் கொண்ட இவர் கொரோனா நேரத்திலும் தீவிரமாக களப்பணியில் ஈடுபட்டு வந்தார்.

ஜெ.அன்பழகன் மறைவு: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரங்கல்!

கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த திமுக எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் இன்று காலை 8.05 மணிக்கு காலமானார். இவரது மறைவிற்கு திமுகவினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது டிவிட்டர் பக்கத்தில், ” திமுக சட்டமன்ற உறுப்பினரும் அக்கட்சியின் முன்னோடி நிர்வாகிகளில் ஒருவருமான திரு.ஜெ.அன்பழகன் அவர்கள் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்ற செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது. அன்னாரது குடும்பத்தினருக்கும் அவர் சார்ந்த இயக்கத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.