திமுக எம்.எல்.ஏ ஜெ. அன்பழகன் உடல்நிலை மீண்டும் கவலைக்கிடம்

 

திமுக எம்.எல்.ஏ ஜெ. அன்பழகன் உடல்நிலை மீண்டும் கவலைக்கிடம்

சென்னை சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி திமுக எம்.எல்.ஏ ஜெ. அன்பழகனுக்கு கொரோனா தொற்று உறுதியானது. தொற்று ஏற்பட்டதையடுத்து அவர் சிகிச்சைக்காக குரோம்பேட்டையிலுள்ள ரேலா மருத்துவமனையில், கடந்த 2 ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார்.

திமுக எம்.எல்.ஏ ஜெ. அன்பழகன் உடல்நிலை மீண்டும் கவலைக்கிடம்

இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள திமுக எம்.எல்.ஏ ஜெ. அன்பழகன் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக ரேலா மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.

திமுக எம்.எல்.ஏ ஜெ. அன்பழகன் உடல்நிலை மீண்டும் கவலைக்கிடம்

மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனாவால் பாதிக்கப்பட்ட திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும், தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள ஜெ.அன்பழகனுக்கு இன்று காலையிலிருந்து தேவைப்படும் ஆக்சிஜன் அளவு அதிகரித்துள்ளது. அவரது சிறுநீரகம் மற்றும் இதயத்தின் செயல்பாடுகள் மோசமடைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது.