“பெண்களுக்கு வலை வீசுவார் ,பின்னர் விலை பேசுவார்” -திருமண வெப்சைட்டில் வேட்டையாடும் வாலிபர் .

 

“பெண்களுக்கு வலை வீசுவார் ,பின்னர் விலை பேசுவார்” -திருமண வெப்சைட்டில் வேட்டையாடும் வாலிபர் .

திருமண வெப் தளத்தில் தன்னைபற்றி போலியான விவரங்களை அளித்து பல பெண்களிடம் மோசடி செய்து வந்த கூட்டத்தை போலீசார் கைது செய்தார்கள் .

புதுடெல்லியில் வசிக்கும் 28 வயதான டேவிட் என்ற வாலிபர் பல திருமண வெப்தளத்தில் தன்னை பற்றி போலியான சுய விவரங்களுடன் கல்யாணத்திற்கு பெண் வேண்டுமென்று பதிவு செய்வார் .அதில் அவர் தன்னை ஒரு மத்திய அரசு அதிகாரி அல்லது டாக்டர் அல்லது ஒரு கஸ்டம்ஸ் ஆபீசர் என பொய்யாக பதிவு செய்வார் .அதை நம்பி அவரை தொடர்பு கொள்ளும் பெண்களிடம் அவர் ஆசையாக பேசி ,அவர்களுக்கு விலையுயர்ந்த பரிசுகள் அனுப்புவது போல நடித்து பணம் பறிப்பார் .
அதன் படி இவர் குர்லா பகுதியை சேர்ந்த ஒரு 34 வயது பெண்ணிடம் தன்னை இணையதளத்தில் ஒரு நியூசிலாந்து நாட்டில் பணி புரியும் டாக்டர் என்று கூறி பேசி பழகி வந்துள்ளார் .அதை உண்மையென்று நம்பிய அந்த பெண்ணிடம் கடந்த ஜூலை மாதம் அவருக்கு பிறந்த நாள் என்றும் அதனால் விலையுயர்ந்த பரிசு ஒன்றை தங்களுக்கு அனுப்பியுள்ளதாகவும், அதை ஏர்போர்ட்டில் டூட்டி கட்டி பெற்றுகொள்ள்ளுமாறு கூறினார் .அதன் பிறகு சிலநாட்கள் கழித்து சிலர் தாங்கள் கஸ்டம்ஸ் ஆபீஸிலிருந்து பேசுகிறோம் என்று கூறி அந்த பெண்ணை தொடர்பு கொண்டார்கள் .அவர்கள் அந்த பெண்ணிடம் உடனே 20 லட்ச ரூபாய் பணத்தினை தாங்கள் கூறும் அக்கௌண்டுக்கு அனுப்புமாறும் கோரினார்கள் .ஆனால் அந்த பெண் அவர்கள் மீது போலீசில் புகார் கூறினார். போலீசார் விசாரித்து அந்த டேவிட் கூட்டத்தை கைது செய்தார்கள் .மேலும் அவர்கள் ஒரு நெட்ஒர்க் வைத்து பல மாநிலத்தில் பல பெண்களை ஏமாற்றியுள்ளது கண்டு பிடிக்கப்பட்டது .

“பெண்களுக்கு வலை வீசுவார் ,பின்னர் விலை பேசுவார்” -திருமண வெப்சைட்டில் வேட்டையாடும் வாலிபர் .