“கொரோனா வந்தாலும் பரவாயில்லை; மாஸ்க் அணிய மாட்டேன்”-ஆர்.கே.செல்வமணி

“கொரோனா வந்தாலும் பரவாயில்லை; மாஸ்க் அணிய மாட்டேன்”-ஆர்.கே.செல்வமணி

சென்னை வடபழனியில் செய்தியாளர்களை சந்தித்த பெப்சி அமைப்பின் தலைவர் ஆர். கே. செல்வமணி , சின்னத்திரை படப்பிடிப்புக்கு அனுமதி வழங்கியது போல் திரைப்பட படப்பிடிப்புக்கு அனுமதி வழங்க வேண்டும். கட்டுப்பாடுகளுடன் தமிழக அரசு அனுமதி தந்தால் அதனை கடைப்பிடித்து படப்பிடிப்பு நடத்த தயாராக இருக்கிறோம் என்றார்.

“கொரோனா வந்தாலும் பரவாயில்லை; மாஸ்க் அணிய மாட்டேன்”-ஆர்.கே.செல்வமணி

அப்போது செல்வமணியிடம் நீங்கள் ஏன் மாஸ்க் அணிவதில்லை என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த செல்வமணி, “மூச்சு விடுவதில் பிரச்சனை இருப்பதால் மாஸ்க் அணிவது இல்லை. கொரோனா வந்தாலும் பரவாயில்லை; ஏற்கனவே தனக்கு கொரோனா வந்து விட்டது. ஒரு மாத காலம் வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டிருந்தேன்” என்று கூறியுள்ளார்.

“கொரோனா வந்தாலும் பரவாயில்லை; மாஸ்க் அணிய மாட்டேன்”-ஆர்.கே.செல்வமணி

மாஸ்க் அணிவது கட்டாயம் என தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில் ஆர். கே. செல்வமணியின் இந்த பதில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.