“கல்வித்துறையில் மிகப்பெரிய சீர்திருத்தத்தை கண்டு சிலர் வருத்தமடைந்துள்ளனர் ” : பிரதமர் மோடி

 

“கல்வித்துறையில் மிகப்பெரிய சீர்திருத்தத்தை கண்டு சிலர் வருத்தமடைந்துள்ளனர் ” : பிரதமர் மோடி

2019 ஆம் ஆண்டு புதிய கல்விக் கொள்கை வரைவை இஸ்ரோ முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் தலைமையில் மத்திய அமைச்சரிடம் வழங்கியது..அதில் உள்ள பல அம்சங்கள் தமிழகத்தில் பல எதிர்ப்புகளை உருவாக்கியது. குறிப்பாக, கலை, அறிவியல் படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வு, தொடக்கக் கல்விக்கான வயதைக் குறைத்தது உள்ளிட்ட பல விஷயங்கள் விமர்சிக்கப்பட்டன. இதற்கு மத்திய அரசு புதிய கல்விக் கொள்கைக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கு ஆதரவும் எதிர்ப்பும் வந்துகொண்டிருக்கின்றன.  முதல்வர் பழனிசாமி தமிழகத்தில் இருமொழி கொள்கையே தொடரும் என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

“கல்வித்துறையில் மிகப்பெரிய சீர்திருத்தத்தை கண்டு சிலர் வருத்தமடைந்துள்ளனர் ” : பிரதமர் மோடி

இந்நிலையில் இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடி காணொலி மாநாட்டில் உரையாற்றும் போது, “புதிய கல்விக் கொள்கையில் எந்த பாகுபாடும் கிடையாது. கல்விக் கொள்கையை அமல்படுத்துவது சவால் நிறைந்த பணியாக இருக்கும். முன்னேறிச் செல்ல சீர்திருத்தமே ஒரே வழி. கல்வித் துறையில் மிகப்பெரிய சீர்திருத்தங்களை கண்டு சிலர் வருத்தம் அடைந்துள்ளனர். பல ஆண்டு ஆய்வுக்கு பிறகே புதிய கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது.தாய்மொழியிலேயே கல்வி கற்பது மூலம் மாணவர்கள் சிறப்பாக கற்க முடியும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

இந்தியாவை வலுவான நாடாக உருவாக்குவதற்கு புதிய கல்விக் கொள்கை முக்கியத்துவம் வாய்ந்தது. மாணவர்களின் கற்பனை திறனை வளர்ப்பதற்கு ஊக்கமாக புதிய கல்வி கொள்கை கொண்டுவரப்பட்டுள்ளது. முழுமையான கல்வி என்பதே தற்போதைய தேவை. அதனால் தான் புதிய கல்விகொள்கை கொண்டுவரப்பட்டுள்ளது” என்றார்.