அது வேற வாய் இது நாற வாய் -துரைமுருகனை சாடும் எஸ்.ஆர்.சேகர்

 

அது வேற வாய் இது நாற வாய் -துரைமுருகனை சாடும் எஸ்.ஆர்.சேகர்

பாஜக அரசு கடந்த 2019ஆம் ஆண்டு குடியுரிமை சட்டத்தில் திருத்தம் மேற்கொண்டு சட்டமாக இயற்றியது. இந்த சட்டம் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் அமலுக்கு வந்தது. பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் நாடுகளில் மதரீதியிலான துன்புறுத்தலுக்கு ஆளாகி கடந்த 2014 டிசம்பர் 31ம் தேதிக்கு முன் இந்தியாவில் குடியேறிய அந்த நாடுகளைச் சேர்ந்த சிறுபான்மையினரான இந்துக்கள், சீக்கியர்கள், சமணர்கள், பார்சி இனத்தவர், பௌத்தர்கள், கிறிஸ்தவர்கள் ஆகியோருக்கு இந்தியக் குடியுரிமை அளிப்பதே திருத்தச்சட்டத்தின் நோக்கமாகும். இந்த பட்டியலில் இஸ்லாமியர்களை குறிப்பிடாதது தான் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

அது வேற வாய் இது நாற வாய் -துரைமுருகனை சாடும் எஸ்.ஆர்.சேகர்

குடியுரிமை திருத்தச் சட்டத்தால் சிறுபான்மையினருக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால் அந்த திருத்தச் சட்டத்திற்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று திமுக கடந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் கூறியது. இது தொடர்பான விவாதத்தின்போது திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், குடியுரிமை திருத்தச் சட்டத்தின் எதிர்ப்பு நிலைப்பாடு குறித்து விளக்கம் அளித்தபோது, குடியுரிமை சட்டத்தை எதிர்க்கவில்லை . குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்க்கிறோம். இந்த சட்டத்தில் கிறிஸ்தவர்கள், சமணர்கள் ,பார்சி இனத்தவர்கள் உட்பட அனைவரையும் இணைத்து உள்ளனர் . இஸ்லாமியர்களையும் ஈழத் தமிழர்களை மட்டும் இணைக்கவில்லை . அதனால் தான் எதிர்க்கிறோம் என்றார்.

மேலும் திமுகவின் தேர்தல் அறிக்கையில் இந்திய குடியுரிமை திருத்த சட்டம் 2019 ல் குறிப்பிடப்பட்டுள்ள மூன்று நாடுகளுடன் நான்காவது நாடாக இலங்கையையும் இணைத்து இந்தியாவில் முகாம்களில் உள்ள நாடற்ற இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்கிட மத்திய அரசை வலியுறுத்தப்படும் என்றும் தேர்தல் அறிக்கையில் 490 எட்டாவது அம்சத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்தில் நான்காவது நாடாக இலங்கையை இணைக்க வேண்டும் என்று வலியுறுத்துவதன் மூலம் குடியுரிமை திருத்தச் சட்டத்தை திமுக ஏற்றுக்கொண்டதா என்ற கேள்வி எழுந்தது .

அது வேற வாய் இது நாற வாய் -துரைமுருகனை சாடும் எஸ்.ஆர்.சேகர்

குடியுரிமை திருத்த சட்ட நிலைப்பாட்டில் திமுக இஸ்லாமியர்கள் விடுபட்டதும் ஈழத்தமிழர்கள் ஈடுபட்டதையும் தான் விமர்சித்தது. இந்நிலையில் இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க வலியுறுத்தப்படும் என்றால் இஸ்லாமியர்கள் பற்றிய திமுகவின் நிலைப்பாடு என்ன என்ற கேள்வியும் எழுந்தது.

மேலும் சட்டசபையில் கவர்னர் உரை மீது நடந்த விவாதத்தின் போது பேசிய சி ஏ ஏ சட்டத்தால் இந்திய முஸ்லிம்களுக்கு பாதிப்பு இல்லை என்பதை ஒப்புக்கொள்வதாக திமுக பதிவு செய்தது. திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் ஹலோ எஃப்எம் க்கு அளித்த பேட்டியிலும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை திமுக எதிர்க்கவில்லை என்று தெரிவித்திருக்கிறார்.

அது வேற வாய் இது நாற வாய் -துரைமுருகனை சாடும் எஸ்.ஆர்.சேகர்

இந்நிலையில் தமிழ்நாடு சட்டப்பேரவையில் சிஇஓ க்கு எதிராக திமுக அரசு தீர்மானம் கொண்டு வந்து இருக்கிறது. அப்போது பேசிய முதல்வர் ஒன்றிய அரசு 2019இல் கொண்டுவந்த குடியுரிமை திருத்தச்சட்டம் மதச்சார்பின்மை கோட்பாட்டிற்கு எதிராகவும் அகதிகளாக வருவோர் மீது மத ரீதியாக பாகுபாடுகள் வகையில் உள்ளது என்று கூறினார்.

இதையடுத்து தமிழக பாஜகவின் பொருளாளர் எஸ்.ஆர்.சேகர்,
ஜனவரி மாதம் ஆதரவு
அடுத்த 20 மாதத்தில் எதிர்ப்பு
அது வேற வாய்
இது நாற வாய்
ஒற்றை பேச்சு என்பதே இல்லாத
வெற்றுப் பேச்சு திமுகவா?
என்று கேட்கிறார்.