தமிழகத்தில் ஐடிஐ மற்றும் தொழிற்பயிற்சி பள்ளிகள் திறக்கப்பட்டன!

 

தமிழகத்தில் ஐடிஐ மற்றும் தொழிற்பயிற்சி பள்ளிகள் திறக்கப்பட்டன!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் ஐடிஐ மற்றும் தொழிற்பயிற்சி பள்ளிகள் திறக்கப்பட்டன.

தமிழகத்தில் ஐடிஐ மற்றும் தொழிற்பயிற்சி பள்ளிகள் திறக்கப்பட்டன!

தமிழகத்தில் இன்று காலை முதல் கூடுதல் தளர்வுகளுடனான ஊரடங்கு ஜூலை 31ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.கொரோனா நோய்த்தொற்று நிலையை கண்காணித்து தொடர்ந்து கட்டுப்படுத்த வேண்டிய அவசியத்தை கருத்தில் கொண்டு அனைத்து மாவட்டங்களிலும் வருகின்ற 31ம் தேதி வரை காலை 6 மணி வரை தொடர்ந்து தடை விதிக்கப்படுகிறது. புதுச்சேரியை தவிர மாநிலங்களுக்கிடையே தனியார் மற்றும் அரசு போக்குவரத்து இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மத்திய உள்துறை அமைச்சகத்தால் அமைக்கப்பட்ட வழித்தடங்களை தவிர சர்வதேச விமான போக்குவரத்து, திரையரங்குகள் ,அனைத்து மதுக்கூடங்கள், நீச்சல் குளங்கள், பொது மக்கள் கலந்து கொள்ளும் சமுதாய மற்றும் அரசியல் சார்ந்த கட்சிக் கூட்டங்கள், பொழுதுபோக்கு ,விளையாட்டு கலாச்சார நிகழ்வுகள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகள், உயிரியல் பூங்காக்கள் போன்றவற்றுக்குத் தடை தொடர்கிறது.

தமிழகத்தில் ஐடிஐ மற்றும் தொழிற்பயிற்சி பள்ளிகள் திறக்கப்பட்டன!

இந்நிலையில் தொழில் பயிற்சி பெறும் மாணவர்களின் வேலை வாய்ப்பினை கருத்தில் கொண்டு அனைத்து தொழிற்பயிற்சி நிலையங்கள் தட்டச்சு சுருக்கெழுத்து பயிற்சி நிலையங்கள் ஒரே நேரத்தில் 50 சதவீத மாணவர்களுடன் சுழற்சி முறையில் பொருள் தடுப்பு வழிகாட்டு நெறிகளை பின்பற்றி செயல்பட தமிழக அரசு அனுமதி அளித்தது . இதன் காரணமாக தமிழகத்தில் ஐடிஐ மற்றும் தொழிற்பயிற்சி பள்ளிகள் திறக்கப்பட்டன. கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றி மாணவர்கள் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள்.

மேலும் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை, புத்தக விநியோகம், பாடத்திட்ட தயாரிப்பு உள்ளிட்ட அனைத்து நிர்வாகப் பணிகளில் தொய்வு நடைபெறுவதற்காக ஆசிரியர்கள் பள்ளிக்கு வந்து பணிபுரியவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.