”ரூ 499க்கு புளூடூத் ஹெட்செட்” – ஐடெல் அறிமுகம்

 

”ரூ 499க்கு புளூடூத் ஹெட்செட்” – ஐடெல் அறிமுகம்

புளூடூத் ஹெட்செட் மற்றும் பவர் பேங்க் ஆகியவற்றை ஐடெல் நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது.

”ரூ 499க்கு புளூடூத் ஹெட்செட்” – ஐடெல் அறிமுகம்

ஐஇபி -32 என்ற பெயரில் அறிமுகமாகி உள்ள இந்த புளூடூத் ஹெட்செட், புளூடூத் 5.0 வில் இயங்க கூடியது. மேலும், இதன் மூலம், 7 மணி நேரம் வரை எச்டி தரத்தில் பாடல்கள் கேட்கலாம் என்றும் மைக் உடன் கூடிய இதில், 7.5 மணி நேரம் போன் பேச முடியும் என்று ஐடெல் நிறுவனம் தெரிவித்துள்ளது. 499 ரூபாய் என்ற குறைந்த விலைக்கு இந்த புளூடூத் ஹெட்செட்டை அறிமுகப்படுத்தி உள்ள ஐடெல் நிறுவனம், ஐபிபி 51 என்ற 10,000 எம்ஏஎச் கொண்ட பவர் பேங்க் ஒன்றையும் அறிமுகப்படுத்தி உள்ளது.

”ரூ 499க்கு புளூடூத் ஹெட்செட்” – ஐடெல் அறிமுகம்

இரண்டு யுஎஸ்பி போர்டு உடன் வரும் இந்த பவர் பேங்க்கில் ஒரே நேரத்தில் இரண்டு போன்களை சார்ஜ் செய்ய முடியும். எல்இடி இண்டிகேட்டருடன் வரும் இந்த பவர் பேங்க், 15 மில்லி மீட்டர் தடிமன் மட்டுமே கொண்டதாகும். இதனால் இதை எளிதில் வெளியிடங்களுக்கு கொண்டு செல்லலாம் என தெரிகிறது. இதன் விலை 949 ரூபாய் என்று ஐடெல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

  • எஸ். முத்துக்குமார்