சிகரெட் முதல் ஹோட்டல் வரை… ரூ.3,797 கோடி லாபம் பார்த்த ஐ.டி.சி.

 

சிகரெட் முதல் ஹோட்டல் வரை… ரூ.3,797 கோடி லாபம் பார்த்த ஐ.டி.சி.

சிகரெட், பிஸ்கட், ஹோட்டல் என பல்வேறு வர்த்தகங்களில் கொடி கட்டி பறக்கும் ஐ.டி.சி. நிறுவனம் கடந்த மார்ச் காலாண்டு நிதிநிலை முடிவுகளை வெளியிட்டுள்ளது. 2020 மார்ச் காலாண்டில் ஐ.டி.சி. நிறுவனம் தனிப்பட்ட முறையில் நிகர லாபமாக ரூ.3,797.08 கோடி லாபம் ஈட்டியுள்ளது. இது 2019 மார்ச் காலாண்டைக் காட்டிலும் 9.05 சதவீதம் அதிகமாகும். அந்த காலாண்டில் ஐ.டி.சி. நிறுவனம் ரூ.3,481.90 கோடி நிகர லாபம் ஈட்டியிருந்தது.

சிகரெட் முதல் ஹோட்டல் வரை… ரூ.3,797 கோடி லாபம் பார்த்த ஐ.டி.சி.

2020 மார்ச் காலாண்டில் ஐ.டி.சி. நிறுவனத்தின் செயல்பாட்டு வாயிலான வருவாய் ரூ.11,420.04 கோடியாக குறைந்துள்ளது. 2019 மார்ச் காலாண்டில் ஐ.டி.சி. நிறுவனத்தின் செயல்பாட்டு வாயிலான வருவாய் ரூ.12,206.03 கோடியாக உயர்ந்து இருந்தது. கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மத்திய அரசு நடைமுறைப்படுத்திய லாக்டவுனால் கடந்த மார்ச் மாதத்தில் ஒரு வாரம் விற்பனை பாதித்ததால் அந்நிறுவனத்தின் வருவாயில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிகரெட் முதல் ஹோட்டல் வரை… ரூ.3,797 கோடி லாபம் பார்த்த ஐ.டி.சி.

ஐ.டி.சி. நிறுவனத்தின் வருவாய் குறைந்துள்ள போதிலும் லாபம் அதிகரித்துள்ளது இதற்கு முக்கிய காரணம் வரி செலவினம் குறைந்ததுதான். ஐ.டி.சி. நிறுவனத்தின் இயக்குனர்கள் குழு தனது பங்குதாரர்களுக்கு சென்ற நிதியாண்டுக்கு (2019 ஏப்ரல்-2020 மார்ச்) பங்கு ஒன்றுக்கு டிவிடெண்டாக ரூ.10.15 வழங்க பரிந்துரை செய்துள்ளது.