ஐ.டி.சி. நிறுவனம் நிகர லாபம் ரூ.3,013 கோடி.. வருவாய் 36 சதவீதம் அதிகம்..

 

ஐ.டி.சி. நிறுவனம் நிகர லாபம் ரூ.3,013 கோடி.. வருவாய் 36 சதவீதம் அதிகம்..

ஐ.டி.சி. நிறுவனம் 2021 ஜூன் காலாண்டில் தனிப்பட்ட முறையில் நிகர லாபமாக ரூ.3,013.5 கோடி ஈட்டியுள்ளது.

சிகரெட் முதல் பிஸ்கட், கோதுமை மாவு, நோட்புக் வரை பல்வேறு நுகர்வோர் பொருட்கள் தயாரிப்பு மற்றும் விற்பனையில் ஈடுபட்டு வரும் ஐ.டி.சி. கடந்த ஜூன் காலாண்டு நிதிநிலை முடிவுகளை வெளியிட்டுள்ளது. ஐ.டி.சி. நிறுவனம் 2021 ஜூன் காலாண்டில் தனிப்பட்ட முறையில் நிகர லாபமாக ரூ.3,013.5 கோடி ஈட்டியுள்ளது. இது சென்ற ஆண்டின் இதே காலண்டைக் காட்டிலும் 28.6 சதவீதம் குறைவாகும். 2020 ஜூன் காலாண்டில் ஐ.டி.சி. நிறுவனம் நிகர லாபமாக ரூ.2,342.76 கோடி ஈட்டியிருந்தது.

ஐ.டி.சி. நிறுவனம் நிகர லாபம் ரூ.3,013 கோடி.. வருவாய் 36 சதவீதம் அதிகம்..
ஐ.டி.சி. தயாரிப்புகள்

2021 ஜூன் காலாண்டில் ஐ.டி.சி. நிறுவனத்தின் செயல்பாட்டு வாயிலான வருவாயாக ரூ.12,959.15 கோடி ஈட்டியுள்ளது. இது சென்ற ஆண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் 36.4 சதவீதம் அதிகமாகும். இதில் சிகரெட் பிரிவு வர்த்தக வாயிலான வருவாய் 32.9 சதவீதம் உயர்ந்து ரூ.5,122.19 கோடியாக உயர்ந்துள்ளது. எப்.எம்.ஜி.சி., ஹோட்டல், அக்ரி பிசினஸ் மற்றும் பேப்பர்போர்ட்ஸ் உள்ளிட்ட வர்த்தகங்கள் வாயிலான வருவாய் அதிகரித்துள்ளது.

ஐ.டி.சி. நிறுவனம் நிகர லாபம் ரூ.3,013 கோடி.. வருவாய் 36 சதவீதம் அதிகம்..
ஐ.டி.சி.

அதேசமயம் ஐ.டி.சி. நிறுவனத்தின் இதர வருவாய் 52.2 சதவீதம் குறைந்து ரூ.428.99 கோடியாக உள்ளது. மும்பை பங்குச் சந்தையில் நேற்று பங்கு வர்த்தகம் முடிவடைந்தபோது ஐ.டி.சி. நிறுவன பங்கின் விலை முந்தைய வர்த்தக தினத்தை காட்டிலும் 1.16 சதவீதம் குறைந்து ரூ.208.65 ஆக இருந்தது.